Home இந்தியா பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம் செய்த பிரிவில் வழக்குப் பதிவு!

பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம் செய்த பிரிவில் வழக்குப் பதிவு!

பிரசாந்த் கிஷோர். பீகாரைச் சேர்ந்த இந்த இளைஞர்தான் 2012 ஆம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வியூகங்களை வகுத்து தந்தவர். தொட‌ர்ந்து 2014 ஆம் ஆண்‌டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி பிரதமராகுவதற்காக அதிரடியாக பல வியூகங்களை வகுத்ததால், நாடு முழுவதும் அறியப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் பிரசாந்த் கிஷோர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரவித்தது. இதற்கு பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

prashant kishor

அரசியல் வியூகம் வகுத்துக்கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் மீது மோதிகாரியை சேர்ந்த சாஸ்வத் கவுதம் என்பவர் பாடலிபுத்திரா காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் பாத் பீகார் கி இயக்கம், தன்னுடைய கருத்துருவைப் திருடிப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்” – முதல்வர் பழனிசாமி

மறைந்த மருத்துவர் சாந்தாவின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை அடையாறு...

நெருங்கும் தேர்தல் : பிரதமர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் பழனிசாமி...

நாடு முழுவதும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : முக்கிய தகவல் இதோ!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,064 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர் சாந்தா மறைவு : பிரதமர் மோடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!

மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக இருந்தவர்...
Do NOT follow this link or you will be banned from the site!