பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்ட அவலம்!

வலியால் துடித்த கர்ப்பிணியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட்: வலியால் துடித்த கர்ப்பிணியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்திதேவி.  30 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சாந்திதேவிக்கு  பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸை  அழைத்துள்ளனர். ஆனால்  ஆம்புலன்ஸ்  சேவை மறுக்கப்பட்டதால், வலியால்  அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த சாந்திதேவி குடும்பத்தினர் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி 10கிமீ பயணம் செய்து CHC என்ற மருத்துவமனையை அடைந்துள்ளனர்.

 

pregnant

ஆனால் அந்த  மருத்துவமனை நிர்வாகமோ, அங்கிருந்து  ஆம்புலன்ஸ் மூலம் 27கிமீ தொலைவில் உள்ள RIMS மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். நீண்ட நேர அலைச்சலுக்குப் பிறகு சாந்திதேவி RIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சாந்திதேவியின் கணவர்,எங்களுக்கு  ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டது. கஷ்டப்பட்டு இருசக்கர வாகனத்தில் என் மனைவியை அழைத்து சென்றோம். எங்கள் கிராமத்தை எம்பி தத்தெடுத்துள்ளார். ஆனால்  ஆம்புலன்ஸ் வசதி கூட இன்னும் கிடைக்கவில்லை’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். 

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!