பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தான் கணித்துக் கூறியதாக வந்த செய்தி பொய்யானது என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தான் கணித்துக் கூறியதாக வந்த செய்தி பொய்யானது என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
பொறியியல் பட்டதாரியான பாலாஜி ஹாசன் சமீபகாலமாக ஜோதிட பலன்கள் கூறி பிரபலமடைந்து வருகிறார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பெரும்பான்மையைக் குவித்து வெற்றி பெறுவார் என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதிலிருந்து படுபிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் இந்த இளம் ஜோதிடர்.
இதுவொருபுறமிருக்கக் கடந்த இரண்டு மாதங்களாகப் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பாலாஜி ஹாசன், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்றும் மேலும், இரண்டாவது இடத்தை ஒரு பெண் தான் பிடிப்பார் என்றும் கணித்துக் கூறியுள்ளதாகப் பரவலாகச் செய்திகள் பரவின. இதனால் போட்டியில் தர்ஷன் அல்லது முகின் தான் வெற்றி பெறுவார்கள் என்றும் இரண்டாவது பெண் என்பதால் அந்த இடம் லாஸ்லியாவுக்கு தான் என்றும் சிலர் மனக்கணக்கு போட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து நாம் அவரை தொடர்புகொண்டு பேசிய போது, ‘இது உண்மைக்கு மாறான செய்தி. நான் யாருக்கும் எந்த இடத்திலும் இதுபோன்ற பேட்டியைக் கொடுக்கவில்லை. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் யாரோ இப்படிச் சதி செய்கிறார்கள்’ என்று ஆதங்கத்தோடு கூறினார்.
(பின் குறிப்பு) நமது டாப் தமிழ் நியூஸ் தளத்திலும் இந்த செய்தி வெளியிடப்பட்டது. இருப்பினும் இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டதால் அதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தோடு இச்செய்தியை வெளியிடுகிறோம். மேலும் தவறுக்காக வருந்துகிறோம்