பிக் பாஸ் வீட்டில் ரஜினிகாந்த்தின் புகைப்படம் நீக்கியதற்கு இது தான் காரணமாம் பா…

பிக் பாஸ் 3 வீட்டில் ரஜினிகாந்த்தின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் ரஜினிகாந்த்தின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று முதல் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. 15 பிரபலங்களுடன் ஆரம்பமான இது அக்டோபர் 6ஆம் தேதி வரை, அதாவது 100 நாட்கள் நடைபெறும். அதில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்சி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

bb

பிக்பாஸ் வீட்டில், ஒவ்வொரு சீசனிலும் விதவிதமாக அலங்காரம் செய்வது உண்டு. ஆனால் இந்த முறை கடந்த இரண்டு சீசன்களை விட, வரலாற்றுச் சிறப்புகளை எடுத்து கூறும் விதத்தில், தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கிராமங்களின் தோற்றத்தை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். 

petta rajini

மேலும் நடிகர் கமல் ஹாசன் விருமாண்டி படத்தில் தோன்றும் ஓவியமும் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி முன்னதாக ரஜினிகாந்தின் பேட்ட பட ஓவியமும் வரையப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.   ஆனால் தற்போது ரஜினிகாந்த்தின் புகைப்படம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. 

இதற்குக் காரணம் என்னவென்றால், அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் புகை பிடிப்பது போல் இருந்ததாகவும், அதனால் தான் ஓவியத்தை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
 

Most Popular

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...

இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. 2020 டிசம்பருக்குள் கோடிக்கணக்கில் வேலை இழப்புகள் இருக்கும் என விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த...

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!