Home சினிமா பிக் பாஸ் வீட்டில் நுழையும் சர்ச்சைக்கு பெயர் போன கிரிக்கெட் வீரர்!

பிக் பாஸ் வீட்டில் நுழையும் சர்ச்சைக்கு பெயர் போன கிரிக்கெட் வீரர்!

இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 12-ல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை: இந்தி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 12-ல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-12 வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அறிமுக விழா கடந்த இரு நாட்களுக்கு முன் கோவாவில் நடந்தது. இதில் பிரபல கிரிக்கெட் வீரரும், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை பெற்றவருமான ஸ்ரீசாந்த் பிக்பாஸ் சீசனில் பங்கேற்க உள்ளார்.

கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாகவும் எதிரணியை சீண்டும் விதத்தில் விளையாடக்கூடியவர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் போட்டிகளிலும் ஹர்பஜன் சிங்குக்கும், இவருக்கும் மோதல் ஏற்பட்டுக் கைகலப்பில் முடிந்தது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய நபரான ஸ்ரீசாந்த் பிக்பாஸ்-12-வது சீசனில் அறிமுகமாக இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews