பிக் பாஸ் வீட்டில் இருக்க அருகதை இல்லாதவர்; அவரை வெளியே அனுப்புங்கள்: நடிகை வனிதா விஜயகுமார் ஆவேசம்!

வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணனை வெளியேற்றுங்கள் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

vanitha

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.வனிதாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இரண்டாவது வாரத்திலேயே வனிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

saravanan

ஆனால் வனிதா விஜயகுமாரை ரசிகர்கள் பலரும்  வைல்ட் கார்ட் என்ட்ரியில் எதிர்பார்த்து வருகின்றனர். காரணம்  வனிதா இருந்தால் அங்கு கூச்சலுக்கும் சரி களேபரத்துக்கும் சரி எந்த பஞ்சமும் இருக்காது. பலமுறை நியாயமாகப் பேசி இருந்தாலும், அவர் மட்டுமே பேச வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்ததாகத் தான் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.  இருப்பினும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத வனிதா, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.

 

இந்நிலையில் சரவணன் பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள  வனிதா, அனைவரும் சரவணனுக்கு வாக்களித்து அவரை வெளியில் அனுப்புங்கள். அவர் இந்த நிகழ்ச்சிக்கு  அருகதை இல்லாதவர். பலர் கூறி நான் கேள்விப்பட்டேன், அவர் பேருந்தில் பெண்களை உரசுபவர் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.

saravanan

சரவணனின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நேற்றைய போட்டியில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந்த். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்....

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி !

கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது...