Home சினிமா பிக் பாஸ் தமிழ்: அடுத்த சீசன் அறிவிப்பு!

பிக் பாஸ் தமிழ்: அடுத்த சீசன் அறிவிப்பு!

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் அடுத்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழ்: அடுத்த சீசன் அறிவிப்பு!

சென்னை: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் அடுத்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனுக்கு கிடைத்த அமோக ஆதரவால் 2ஆவது சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார். இதில் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இதையடுத்து கடந்த 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 2வின் டைட்டில் வின்னராக  ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்.  இரண்டாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா பெற்றார்.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல், மீண்டும் பிக் பாஸ் ரசிகர்களைச் சந்திப்பேன் என நம்புவதாகக் கூறினார். இதன் வாயிலாக விஸ்வரூபம் 3, இந்தியன் 3யில் வருகிறாரோ இல்லையோ பிக் பாஸ் 3யில் கண்டிப்பாக கமல் வருவார். பிக் பாஸ் மேடையை   தன் அரசியல் உத்தியாகப் பயன்படுத்தி வந்த கமல் ஹாசன் மீண்டும் இந்த மேடையின் மூலமாகவே ரசிகர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ்: அடுத்த சீசன் அறிவிப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், வட்டி விகிதம் தொடர்பான அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள்...

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள்...

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல்...
- Advertisment -
TopTamilNews