Home சினிமா பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரை மீம் போட்டு கலாய்த்த யாஷிகா: வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளரை மீம் போட்டு கலாய்த்த யாஷிகா: வைரல் புகைப்படம்!

நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பாத்திமா பாபுவை ஒப்பிட்ட மீம் ஒன்றை யாஷிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சென்னை:  நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் பாத்திமா பாபுவை ஒப்பிட்ட மீம் ஒன்றை யாஷிகா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த முறையும்  கமல்ஹாசனே  தொகுத்து  வழங்குகிறார். நமக்கு மிகவும் பரிட்சயமான முகங்கள்  இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதால் போட்டி கடந்த சீசனை விட இந்த முறை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

yashika

 பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்  முதல் போட்டியாளராக நுழைந்த பாத்திமா பாபு  தண்ணீருக்கு மீட்டர் பொருத்தியுள்ளது குறித்து கைதட்டி வரவேற்ற சக போட்டியாளர்களைக் கடிந்து கொண்டார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அப்செட்டாகினர்.

fathima

இந்நிலையில்  பிக் பாஸ்  சீசன் 2 வில் பங்கேற்ற  யாஷிகாவுடன் பாத்திமா பாபுவை ஒப்பிட்டு மீம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் யாஷிகாவை பார்த்து சிரிப்பது போலவும்,  பிக் பாஸ் சீசன்3  போட்டியாளர் பாத்திமாவை பார்த்து முறைப்பது போலவும் அந்த மீம் உள்ளது. இதைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் யாஷிகா பதிவிட்டுள்ளார். 

yashika

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிலேயே பாத்திமா பாபு தான்  சீனியர். அதனால் அவரது வயதை வைத்து கலாய்ப்பது போல இந்த மீம்  இருக்கிறது. அதே நேரத்தில் யாஷிகா கடந்த சீசனில் போட்டியிட்ட  போட்டியாளர்களிலேயே வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னை காசிமேட்டில் கடும் கடல்சீற்றம் : அச்சத்தில் மக்கள்!

வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயலால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தீவிர புயலாக இருக்கும் நிவர், அதிதீவிர புயலாக மாறி நள்ளிரவு அல்லது...

இன்னொரு நாட்டின் அதிபருக்கும் கொரோனா? யார் தெரியுமா?

கொரோனாவின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் கொடூரமாக வெளிப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 1 லட்சத்து  5 ஆயிரத்து 740 பேர். இன்றைய...

போலீசை கால் ஷுவை நக்க வைப்போம் – பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று அவரையும் அவரது திரிணாமுல் கட்சியையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புயல் வேகத்தில் தெரிக்கவிடும் மீம்ஸ்கள்!

நிவர் புயல் தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்காகவே காத்திருந்தது போல மீம்ஸ் கிரியேட் செய்பவர்கள், ரகளையாக மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். வழக்கம்போல, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வடிவேலு இல்லாமல் எதையும்...
Do NOT follow this link or you will be banned from the site!