Home அரசியல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு; அந்த வீடே அலிபாபா குகை மாதிரி உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு; அந்த வீடே அலிபாபா குகை மாதிரி உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார் மாதிரி. திடீர் என வருவார் திடீர் எனக் காணாமல் போய்விடுவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு; அந்த வீடே அலிபாபா குகை மாதிரி உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

வசூல் ராஜா MBBS படம் மூலம்  நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

kaml

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான கமல் ஹாசன்   சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களிடம்  உரையாடினார். அப்போது பேசிய அவர்,  கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் நினைத்தனர். அதனால்தான் அரசியலில் கறை படிந்துவிட்டது. மாணவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கக் கூடாது. அரசியல் பேசாமல் எந்த துறையும் வளர்ச்சி பெறாது. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டு கடப்பாரையுடன் அண்ணாந்து பார்ப்பவர்கள் நாங்கள் கிடையாது. உங்களுக்கான பாதையை உருவாக்கி வைத்திருப்பவர்கள். நீங்கள் வருவது மட்டும் தான் பாக்கி’என்று உணர்ச்சிகரமாகப் பேசியிருந்தார்.

jayakumar

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ‘கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார் மாதிரி. திடீர் என வருவார் திடீர் எனக் காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டும் வந்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போய்விடுவார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீடே அலிபாபா குகை மாதிரி உள்ளது. அங்கிருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடி வருகிறார்கள்’ என்ற அவரிடம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்படுமா? என்று கேட்டதற்கு, திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கூறினார். 

 

தொடர்ந்து பேசிய அவர், வசூல் ராஜா MBBS படம் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன் என்று கூறி திக்குமுக்காட வைத்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு; அந்த வீடே அலிபாபா குகை மாதிரி உள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மக்களே உஷார்…! கொரோனா இரண்டாம் அலை “மிகவும் ஆபத்தானது” – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது....

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...
- Advertisment -
TopTamilNews