லாஸ்லியாவை நாமினேட் செய்த ஹவுஸ் மேட்: கொந்தளிக்கும் ரசிகர்கள்! 

 

லாஸ்லியாவை நாமினேட் செய்த ஹவுஸ் மேட்: கொந்தளிக்கும் ரசிகர்கள்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் நடைபெறும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியுள்ளது. 

அதில் மீரா, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார். தொடர்ந்து அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் செய்ய, மதுமிதாவையும்,மீராமிதுனையும் சாக்சி நாமினேஷன் செய்ய, கவின், சரவணன் ஆகியோரை பாத்திமா பாபு நாமினேட் செய்ததை காலையில் முதல் புரோமவில் பார்த்தோம்…

losliya

இந்த நிலையில் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் சேரன், இரண்டு பேருக்கு முகமே இல்லாம இருக்காங்க, தர்ஷன் மற்றும் லாஸ்லியா. இவங்க எல்லோருக்கும் மத்தியில் வேண்டாம் என்பது என் கருத்து’ என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து பேசிய சரவணன், சேரன் மற்றும் பாத்திமா பாபு என்று கூறியுள்ளார். இதற்கான காரணம் கூறுகையில், ‘சேரன் இயக்குநர் என்பதால் மிகவும் டாமினேட் செய்வதாகவும் பாத்திமா அடுத்தவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைகிறார்’ என்று கூறியுள்ளார். 

இதை பார்த்த லாஸ்லியா ரசிகர்கள், ‘அடப்பாவிகளா… நேற்று வரைக்கும் பொண்ணு’னு சொல்லிட்டு இப்போ நாமினேட் பண்றிங்க’ என்று மிகவும் கோபமாக கருத்து பதிவு செய்து வருகின்றனர். 

losliya