கமல்ஹாசன் முன்பு மாலை மாற்றிக்கொண்ட ஷெரின்- தர்ஷன் ஜோடி: உச்சக்கட்ட கடுப்பில் தர்ஷனின் காதலி! 

 

கமல்ஹாசன் முன்பு மாலை மாற்றிக்கொண்ட ஷெரின்- தர்ஷன் ஜோடி: உச்சக்கட்ட கடுப்பில் தர்ஷனின் காதலி! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களை நெருங்கி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, ரேஷ்மா, மீரா மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி மற்றும் லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் ஹீரோ, வில்லன், ஸிரோ விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கூறுகிறார். இதையடுத்து கஸ்தூரி, ‘ஷெரின் மற்றும் தர்ஷனை அழைத்து இரண்டு பெரும் சேர்ந்து மாலை மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று அவர்களைச் சேர்த்து வைக்கிறார். 

அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், கஸ்தூரியிடம் உங்கள் ஹீரோ யார் என்று சொல்லவே இல்லை? என்று கேட்க, உடனே அவர், எனக்கு எப்போதும் நீங்க தான் ஹீரோ’ என்று சொல்வது போன்று புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக தர்ஷன் மற்றும் ஷெரின் விரும்பினால் தான் விலகிவிடுவேன் என்று சனம் ஷெட்டி ஒரு பேட்டியில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.