பிக்பாஸில் காதலித்தது நடிப்பு அல்ல நிஜம்தான் ! நிச்சயம் செய்து நிரூபித்த காதல் ஜோடி !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மலர்ந்த ஜோடிக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் மலர்ந்த ஜோடிக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அனைத்து மொழிகளிலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, காதல்,சர்ச்சைகள் என சமூகவலைதளவாசிகளை பேசிக் கொண்டே இருக்க செய்யும். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் முதல் சீசனில் நடிகர் ஆரவ்- ஓவியா, இரண்டாவது சீசனில் நடிகர் மகத்- யாஷிகா, மூன்றாவது சீஸனில் கவின்- லாஸ்லியா ஆகியோர் காதலித்து வந்தனர். கவின், லாஸ்லியா காதல் இன்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால் இவர்கள் காதல் திருமணத்தில் போய் முடிகிறதாக என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருக்கும் நாட்களில் காதலிப்பவர்கள் வெளியில் வந்து தொடர்வதாக தெரிவதில்லை. அதனால்தான் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்துமே நடிப்பை தவிர உண்மை கிடையாது என கூறி வருகின்றனர்.

shetty

இந் நிலையில் கன்னட மொழி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளரான இசை அமைப்பாளர் சந்தன் ஷெட்டிக்கும் சகபோட்டியாளர் நிவேதா கவுடாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தற்போது இவர்களின் இருவீட்டாரும் மைசூரில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். மேலும் கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் எனவும் தெரிவித்து உள்ளார்கள். இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...