Home சினிமா பிகிலின் வெறித்தனத்திற்கு போட்டியாகும் அஜித்தின் வெறி வேண்டாம் பாடல்

பிகிலின் வெறித்தனத்திற்கு போட்டியாகும் அஜித்தின் வெறி வேண்டாம் பாடல்

நேற்று பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் வெறித்தனம் என்ற பாடல் பாடுகிறார் என்று அறிவிப்பு வெளியான சில நொடிகளில் வெறித்தனம் சமூக வலைதளங்களை அதிரவைத்தது. இந்நிலையில் அதற்கு போட்டியாக இன்று நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு.

நேற்று பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் வெறித்தனம் என்ற பாடல் பாடுகிறார் என்று அறிவிப்பு வெளியான சில நொடிகளில் வெறித்தனம் சமூக வலைதளங்களை அதிரவைத்தது. இந்நிலையில் அதற்கு போட்டியாக இன்று நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது படக்குழு.

பாலிவுட்டை கலக்கிய பிங்க் படத்தின் ரீமேக்கை இயக்குநர் வினோத் நேர்கொண்ட பார்வை என தமிழில் இயக்கியுள்ளார். நடிகர் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்திலும், அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து வானில் இருள் என்ற முதல் பாடலை கடந்த மாதம் வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு போட்டியாக இன்று வெறி வேண்டாம் என்ற இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு தயாரிப்பாளர் போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

EDM எனப்படும் ‘Electronic Dance Music’ என்ற நைட் கிளப்புகளில் பாடும் பாடல் வகையைச் சேர்ந்த  இந்த பாடல் ‘காலம் ஒரு புதிய ராஜியம் இனிமேல் சந்தோஷம்’ என தொடங்குகிறது. நடுவில் வெறி வேண்டாம்… பிக் அப்… கெட் அப்… லுக் அப் ஏ நியூ மில்லெனியம்.. கவலை வேண்டாமே என் தோழா என தொடர்கிறது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!

குழந்தைகள் தங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களைப் பார்த்து பார்த்துத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்யப் பழகுகின்றனர். கண் விழித்ததிலிருந்து தூங்கச் செல்வது வரையில் ஒவ்வொரு நிகழ்வையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். அதன்...

எம்ஜிஆர் செய்த அந்த செயலை உதயநிதி செய்ய முடியுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

27 ஆம் தேதி வெளியே வரும் சசிகலாவால் ஆட்டம் காணப்போகிறார் எடப்பாடி- முக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்

எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளையொட்டி கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில் உள்ள பொப்பிளி ராஜா சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர், அமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!