Home தமிழகம் பா. ரஞ்சித் இந்துவே கிடையாது: மதமாற்றத்திற்காகக் கலவரத்தைத் தூண்டுகிறார்: ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

பா. ரஞ்சித் இந்துவே கிடையாது: மதமாற்றத்திற்காகக் கலவரத்தைத் தூண்டுகிறார்: ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

குறிப்பிட்ட சிலரிடம் நிலம் உள்ளது எங்களிடம் ஏன்  இல்லை என்பதைக் குறித்து நான் ஆராய்ந்து வருகிறேன். நான் கூறிய கருத்தும் பேச்சும் மற்றவர்களைக் கோபப்படுத்தியிருந்தால் அது எதிர்ப்பவர்களின்  தவறு, என் தவறு இல்லை என்றார்.

காஞ்சிபுரம் : சாதி கலவரத்தைத் தூண்டுவதே இயக்குநர் பா. ரஞ்சித்தின் நோக்கம்  என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

rajith

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாகிப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள இயக்குநர்  பா. ரஞ்சித் நேற்று சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ராஜராஜ சோழன் குறித்து நான் பேசியதை  எந்த இடத்திலும் மறுக்கவில்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால் அவர்மீதான விமர்சனம் குறித்து என்னுடன் உரையாடி இருப்பார். குறிப்பிட்ட சிலரிடம் நிலம் உள்ளது எங்களிடம் ஏன்  இல்லை என்பதைக் குறித்து நான் ஆராய்ந்து வருகிறேன். நான் கூறிய கருத்தும் பேச்சும் மற்றவர்களைக் கோபப்படுத்தியிருந்தால் அது எதிர்ப்பவர்களின்  தவறு, என் தவறு இல்லை என்றார்.

raja

இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தரிசித்த  பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்த போது, ராஜராஜசோழன் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பா.ரஞ்சித் எந்த ஒரு கருத்தும் கூறியிருக்க மாட்டார். தீண்டாமை என்பது சமண மத காலத்தின் போது தான் உருவானது. ஆனால் இந்து சமுதாயத்தில் எப்போதும் தீண்டாமை என்பது இருந்தது கிடையாது. அப்படி இருக்கும் போது ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டாமை  இருந்திருக்க வாய்ப்பே இல்லை.  இது கிறிஸ்துவ மதமாற்றச் சக்திகளின் சதி வேலை. பா. ரஞ்சித் இந்துவே இல்லை. பா. ரஞ்சித், வைரமுத்து போன்ற ஆட்களின்  நோக்கமே இந்து சமூகத்தில்  சண்டையை மூட்டிவிட்டுச் சாதி கலவரத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலம் மதமாற்றம் செய்வதேயாகும்’ என்றார். 

Most Popular

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி...

ரயில்களுக்கு ரெஸ்ட் கொடுத்த அரசு…. லாக்டவுனால் நஷ்டத்தை சந்தித்த ஐ.ஆர்.சி.டி.சி.

ஐ.ஆர்.சி.டி.சி. 2020 ஜூன் காலாண்டில் ரூ.24.60 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனம் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸம் கார்ப்பரேஷன்...
Do NOT follow this link or you will be banned from the site!