Home சினிமா பா.ஜ.க-வில் இருந்து விலகிய பிரபல பிக் பாஸ் நடிகை! காரணம் இது தான்!

பா.ஜ.க-வில் இருந்து விலகிய பிரபல பிக் பாஸ் நடிகை! காரணம் இது தான்!

நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.கவில் இருந்து மட்டுமின்றி அரசியலில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க-வில் இருந்து விலகிய பிரபல பிக் பாஸ் நடிகை! காரணம் இது தான்!

சென்னை:  நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.கவில் இருந்து மட்டுமின்றி அரசியலிலிருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

சார்லி சாப்ளின், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதில் சர்ச்சையாகப் பேசியது, குடித்துவிட்டு ரோட்டில் விபத்து ஏற்படுத்துவது என்று அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இவர் பெயர் இடம்பிடித்து கொண்டே இருந்தது. பின்பு சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

gayathri

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,’ வாக்குவாதம், மற்றவர்களை குற்றம் சொல்லும் அரசியல் இன்று அதிகரித்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ள இன்றைய அரசியலை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. 

தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கு எதுவும் மாறுவது போல் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. எனவே எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்துவிட்டது. அரசியலில் விஸ்வாசமாக இருந்தாலும் கடைசியில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம். சினிமாவை விட, அரசியலில் அதிக நடிகர்கள் உள்ளனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள் அதிகம் உள்ள அரசியலில் என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. 

ஆனால் அதே நேரத்தில் நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்பு உணர்வுடன் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன். அதுவரை அமைதியாக வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். தீவிர அரசியலுக்கு இது நேரமில்லை என்று எனக்கு தெரிகிறது. இப்போதைக்கு நான் எந்த  ஒரு கட்சிக்கும் ஆதரவு இல்லை.  இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார். 

பா.ஜ.க-வில் இருந்து விலகிய பிரபல பிக் பாஸ் நடிகை! காரணம் இது தான்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை சின்னாபின்னாமாக்கியது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை எட்டியது. உயிரிழப்பும் நான்காயிரத்தைத் தாண்டிச் சென்றது. அதற்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு அஸ்திரத்தைக்...

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது....

மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன் முழு ஊரடங்கு அமலில்...

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...
- Advertisment -
TopTamilNews