பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட 8 நாடுகளில் மட்டுமே மக்களின் தொகை அதிகம் – பா.ஜ. செயல் தலைவர் நட்டா பெருமிதம்

பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியை தொட்டு விட்டது. பா.ஜ. உறுப்பினர்கள் அளவை காட்டிலும் 8 நாடுகளில் மட்டுமே மக்கள் தொகை அதிகமாக உள்ளது என பா.ஜ. செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக பா.ஜ. செயல் தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ.வில் புதிதாக 7 கோடி உறுப்பினர்கள் சேர்ந்தள்ளனர். இதனையடுத்து பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியை தாண்டி விட்டது. தற்போது பா.ஜ. உறுப்பினர்கள் அளவை காட்டிலும் 8 நாடுகளில் மட்டுமே மக்கள் தொகை அதிகமாக உள்ளது. 

அமித் ஷா

கடந்த 2016ம் ஆண்டில் பா.ஜ. உறுப்பினர்கள் எண்ணிக்கை 16 கோடியை எட்டியது. இதனையடுத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமை பா.ஜ. பெற்றது. மேற்கு வங்கத்தில் 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் பா.ஜ.வில் சேர்ந்தனர். ஜம்மு அண்டு காஷ்மீரில் கட்சியில் 6 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ. தொண்டர்கள்

பா.ஜ. தலைவர் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சரானதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ஜே.பி. நட்டா செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் முழு நேர தலைவராக ஜே.பி.நட்டா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ. தலைவரின் பதவி காலம் 3 ஆண்டுகள். இருப்பினும் 2வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் இருக்க வாய்ப்பும் உண்டு.

Most Popular

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வழங்க முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழில் அதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய அரசு...

“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கார்ச்சா கிராமத்தில் போலா என்ற 23 வயது வாலிபரும் ,ப்ரியங்கா என்ற 20 வயது பெண்ணும் காதலித்தனர் .ஆனால் அவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான...

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...