Home அரசியல் பா.ஜ. அரசு கவிழ்ந்தால் மாற்று அரசு அமைக்க முயற்சி செய்வோம்- தேசியவாத காங்கிரஸ்

பா.ஜ. அரசு கவிழ்ந்தால் மாற்று அரசு அமைக்க முயற்சி செய்வோம்- தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஆட்சி பா.ஜ.க. கவிழ்ந்தால், நாங்கள் உறுதியாக மாற்று அரசு அமைக்க முயற்சி செய்வோம் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி 161 இடங்களை வென்றது. இதனையடுத்து அதிக இடங்களை வென்ற (105) பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுக்க வேண்டும் என சிவ சேனா போர்க்கொடி தூக்கியது. இதனால் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பகத் சிங் கோஷ்யாரி

புதிய அரசு அமைப்பதற்கான காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததால் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அன்று அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிடம் வழங்கினர். இந்நிலையில், அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க நேற்று கவர்னர் அழைப்பு விடுத்தார்.

பா.ஜ.க.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக் கூறுகையில், அதிக இடங்களை வென்ற பா.ஜ.க.வை அரசு அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை கவர்னர் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் குதிரை வர்த்தகம் நடைபெறும். இருப்பினும் பா.ஜ.க. அரசு அமைத்தால், பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பின்போது பா.ஜ.க.வுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம். பா.ஜ.க. அரசு கவிழ்ந்தால், நாட்டின் நலன் கருதி மாற்று அரசு அமைக்க நாங்கள் கண்டிப்பாக முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனாவுக்கு இதுவரை 1.36 லட்சம் பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், உலக நாடுகளில் இரண்டாம் கட்ட அலையில் கொரோனா இருப்பதால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தீபாவளி...

‘உடல் உறுப்பு தானம்’ – முதல்வர் பெருமிதம்!

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வானதற்கு முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்...

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட...

’பிக்பாஸ் வீட்டில் உருவானது மூன்றாவது அணி! –ஆனா…’ பிக்பாஸ் 53-54-ம் நாள்

புயல், மழை காரணமாக போட்டியாளர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர் என்று செய்திகள் முன்பே வந்தன. ஆனால், அதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் செய்தித் தொடர்பாளர் மறுத்து கூறியிருந்தார். ஆனால், நேற்றைய எப்பிசோட்டில்...
Do NOT follow this link or you will be banned from the site!