Home தமிழகம் பாஸ் பெற்றுக் கொண்டு வெளியே செல்ல வேண்டிய திட்டத்தில் மாற்றம்!

பாஸ் பெற்றுக் கொண்டு வெளியே செல்ல வேண்டிய திட்டத்தில் மாற்றம்!

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் பாஸ் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதே போல உள்ளூர் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் சொந்த வாகனங்களில் செல்வதற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை. 

ttn

இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் பாஸ் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அவசர தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டிய மக்கள், வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர்களிடம் பாஸ் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடைமுறை தற்போது நீக்கப்படுவதாக உள்துறை  தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊரடங்கு அமலில் இருப்பினும் மக்கள் வெளியே செல்வது தொடர்வதால், அவசர பயணங்களுக்கு வட்டாட்சியர், மாநகராட்சி துணை ஆணையர்களிடம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறை நீக்கப்படுகிறது என்றும்  மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மூலம் பாஸ் பெற வேண்டும் என்ற பழைய நடவடிக்கையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.

Most Popular

ஒரத்தநாடு விவசாயிக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டு!

ஒரத்தநாடு விவசாயிக்கு கூரியரில் பைப் வெடிகுண்டு வந்திருப்பதால், அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே...

பாஜகவினர் வைத்த கொடிக்கம்பம் அகற்றம்; மதுரவாயலில் பாஜக ஆர்ப்பாட்டம்!

சென்னை மதுரவாயிலில் பாஜகவினர் வைத்த கொடிக்கம்பத்தை மாநகராட்சியின் அகற்றியதால், மதுரவாயலில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மோடியின்...

பங்களாக்கள் ஜாக்கிரதை! விமானத்தில் வந்திறங்கிய கொலம்பிய கொள்ளையர்கள்! திடுக்கிடும் தகவல்கள்!

தமிழக, பெங்களூர் போலீசாருக்கு சவாலாக இருந்து வந்த கொலம்பிய கொள்ளையர்கள் சிக்கினர். பிடிபட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெங்களூரு...

40 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிரடி

கொரோனா பேரிடர் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 3 லட்சத்து  51 ஆயிரத்து 589 பேர்.    
Do NOT follow this link or you will be banned from the site!