பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரபல சின்னதிரை நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்!?

பெண்கள் இருவரை  பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு: பெண்கள் இருவரை  பாலியல் வன்கொடுமை செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

harassment

பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியில் இரண்டு பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். இவர்கள் கடந்த 12 ஆம்  தேதி இரவு,ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர். பெண்கள் இருவரும் உணவுக்காகக் காத்திருந்த சமயத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. ஆர்டர் செய்த உணவு தான் வந்துவிட்டது என்று எண்ணி கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது மூவர் கத்தியுடன் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். பின்பு இரு பெண்களையும் கத்தி முனையில் மிரட்டி அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகத் தெரிகிறது.

abuse

இதைத் தொடர்ந்து பெண்கள் இருவரும் நடந்தவற்றை தங்கள் நபர்களிடம் கூற அவர்கள் போலீசில்  புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது  கன்னட டிவி நடிகர் ராகேஷ், கார் டிரைவர் மணிகண்டா, பானி பூரி விற்கும் சூர்யா என்பது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார்  கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...