Home க்ரைம் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்...எச்சரிக்கை..!?

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்…எச்சரிக்கை..!?

போர்னோ படங்களை பற்றிய பிம்பங்களை போட்டு உடைத்து விட்டு போகவேண்டும்.அதைவிட்டு படம் பார்ப்பது தவறு என்று புத்திமதியெல்லாம் சொன்னால், அவர்களுக்கு கோபம்தான் வரும் இன்னொரு வகையில் எதை தடுக்கிறோமோ அதைப்பற்றிய ஆர்வமே அவர்களுக்கு மேலோங்கும்.

மீடியாவில் வரும் செய்திகளில் ஒவ்வொரு நாளும் தவிர்க்க முடியாத செய்திகளாக அதிகம் இடம்பெறும் செய்திகள் என்று பார்த்தால் பாலியல் வன்முறைச் சம்பவங்களாகவே இருக்கின்றன! அதிலும் குறிப்பாக இளம் வயதுடைய சிறுவர்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியடைய வைக்கிறது!

j

இதெற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்…பெற்றோர்கள்,தங்கள் பிள்ளைகளிடம் இதுகுறித்து எப்படி நடந்துகொள்ள வேண்டும்…
தமாஷ் இல்ல.. வெரி சீரியஸ் பதிவே…திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் எதிர்வீட்டு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்று கடைசியில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்திருக்கிறான் ஒரு மாணவன்..
இது சாதாரணமாய் கடந்துபோய்விட முடியாத ஒரு சம்பவம்..கண்டிப்பாக அலச வேண்டிய சமுதாய சிக்கலை கோடிட்டு காட்டும் சம்பவம்.

பொதுவாக குழந்தை பருவத்திலிருந்து விடுபட்டு சிறுவன் பருவம் எட்டும்போது, பெண்ணின் அங்கங்களை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற உந்துதல் ஆட்டிப்படைக்கும். தாய் வயதில் உள்ள பெண்ணைக்கூட அந்த ஆர்வம் விட்டு வைக்காது..

ssdsa

டைரக்டர் மகேந்திரன் இந்த சிக்கலை பூட்டாத பூட்டுக்கள் படத்தில் அழகாக காட்சிப்படுதியிருப்பார். பிள்ளை பாக்கியம் இல்லாத கதாநாயகன், வளர்ப்பதற்காக ஏழெட்டு வயதுள்ள சிறுவன் காஜா ஷெரிப்பை வீட்டுக்கு கூட்டுகிட்டு வருவார். வீட்டில் உள்ள கட்டிய மனைவி உள்ளிட்ட பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். சிறுவனோ, அந்த வீட்டில் உள்ள முப்பது வயது வேலைக்கார பெண்ணை திருட்டுத்தனமாக பார்க்க முற்படுவான். குளிக்கும்போது, கிணற்றில் நீர் அள்ளும்போது, பாத்திரம் துலக்கும்போது என அந்த பெண்ணின் முக்கிய இடங்களை ஜாடைமாடையா பார்ப்பதையே வேலையா திரிவான். சிறுவனாக இருந்தாலும் அவனின் திருட்டு பார்வையில் உடம்பு கூசவே உஷராகும் வேலைக்கார பெண்.வீட்டு எஜமானியிடம் சொல்வாள்.

சின்ன பையனா இருந்துகிட்டு பெரிய மனுஷன் பண்ற சேஷ்டையெல்லாம் செய்துன்றது விஷயம் அவள் கணவனுக்கு போகும், மகனாக வளர்க்க கொண்டு வந்தால் இந்த நாய் பெரிய பொம்பளைங்களை பெண்டாளவே நினைக்குதேன்னு நொந்துபோய், உடனே சிறுவனை அடித்து துரத்திவிடுவார்.

cvv

பெண்ணின் அங்கங்கள் எப்படி இருக்கும் என்று ஆர்வம் சிறுவர்களை ஆட்டிப்படைத்த காலம் இன்டர்நெட் வந்ததும் பிரமோஷன் ஆகிப்போய் விட்டது. நெட்டில் கொட்டிக்கிடக்கும் அப்பட்டமான உறவு காட்சிகள் எளிதாகவே சிறுவர்கள் வசப்பட்டு போய்விட்டன.. அங்கங்களை வெறுமனே பார்க்க மட்டுமே துடித்த மனசு, இப்போது, தொட்டுப்பார்த்து அனுபவித்தால் என்ன என்ற லெவலுக்கு போய்விட்டது.
சிறுவயதில் பாலுணர்ச்சி அலைபாய்வதை ஒரேயடியாக தடுக்க முடியாதோ அதே போலத்தான் விஞ்ஞான வளர்ச்சியிலிருந்து ஒரேயெடியாக ஒதுங்கிப்போய் விடமுடியாது.

ஆனால் கண்டிப்பாக பாலியல் சமாச்சாரங்கள், பாலியல் குற்றங்கள் பின்விளைவுகள், தண்டனைகள், குடும்பத்திற்கு சமூகத்தில் கிடைக்கும் அவமானம் பற்றி விளக்கம் சொல்லி நெறிப்படுத்தலாம்..படுத்தியே ஆகவேண்டும்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஜாடைமாடையாக நாசூக்காக இளம் வயது பிள்ளைகளிடம், மகனாக இருந்தாலும் சரி மகளாக இருந்தாலும் சரி பாலியல் தொடர்பான விஷயங்களில் எவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

zzvz

உன் பிரண்ட்ஸோடு சேர்ந்து திருட்டுத்தனமாய் செல்போனில் பார்க்கும் மேற்படி படங்கள் அத்தனையும் சுத்த ரீல், சாத்தியமே இல்லாதவை. பதினைந்து நிமிடம் ஓடும் வீடியோவை எடுக்க ஒரு வாரம் சூட்டிங் நடத்தி எடிட் பண்ணி பெரிய பராக்கிராமசாலி போல காட்டுவார்கள் என போகிற போக்கில் போர்னோ படங்களை பற்றிய பிம்பங்களை போட்டு உடைத்து விட்டு போகவேண்டும்.அதைவிட்டு படம் பார்ப்பது தவறு என்று புத்திமதியெல்லாம் சொன்னால், அவர்களுக்கு கோபம்தான் வரும் இன்னொரு வகையில் எதை தடுக்கிறோமோ அதைப்பற்றிய ஆர்வமே அவர்களுக்கு மேலோங்கும்.

பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல வேறு வகையான குற்றங்கள் பற்றியும் அவர்களிடம் நாசூக்காக சொல்ல வேண்டும்.ஆண்ட்ராய்ட் செல்போன் காலத்தில். எங்கே என்ன தவறு செய்தாலும் தப்பவே முடியாது. கண்டிப்பாக மாட்டியே தீருவோம் என்பதை அவர்களிடம் உதாரணங்களோடு சொல்லவேண்டும்.

cddvdv

பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களும் சிறுவர் சிறுமியர் மனதில் தெளிவுகள் பிறக்கும் வகையில், பாடத்திட்டங்களையும் தாண்டி நட்பாக எடுத்துரைக்க வேண்டும்..
இப்படியெல்லாம் செய்தால் குற்றங்கள் ஒழிந்து விடுமா என்று கேட்கலாம். நடக்கவுள்ள குற்றங்களை தடுக்கலாம், முடிந்த அளவுக்கு குறைக்கலாம். அவ்வளவே
நம்ம அறிவுக்கு தெரிஞ்சி இவ்ளோதான்.

 

எழுதியவர்: ஏழுமலை வெங்கடேசன்

மாவட்ட செய்திகள்

Most Popular

குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற இளநீர் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது!

2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...

ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...

சசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்!

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...
Do NOT follow this link or you will be banned from the site!