Home சினிமா பாலியல் இச்சைக்காக சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள் பெரிய ஆளா; ஸ்ரீரெட்டி காட்டம்?!..

பாலியல் இச்சைக்காக சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள் பெரிய ஆளா; ஸ்ரீரெட்டி காட்டம்?!..

இங்கே பெரிய நடிகர்கள் என சொல்லப்படுபவர்களில் பலர் சில்க் ஸ்மிதாவை தங்கள் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தியவர்கள். அந்த சைக்கோக்களை எப்படி ஆளுமையாக ஏற்றுக்கொள்ள முடியும்.

கோலிவுட்டில் அமைதி நிலவும் போதெல்லாம் யாராவது வெடியை கொளுத்தி போடுவது வழக்கம். அதை நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி செய்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரண்ஸ், சுந்தர் சி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் இச்சையை தீர்த்துக்கொண்டதாக புகார் சொன்னவர் ஸ்ரீரெட்டி. அதன்பிறகும் இந்த பட்டியல் நீண்டது, தெலுங்கு திரையுலகை சேர்ந்த சிலர் மீதும் குற்றஞ்சாட்டினார்.

silk

தற்போது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பதிவிட்டு ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதில், இங்கே பெரிய நடிகர்கள் என சொல்லப்படுபவர்களில் பலர் சில்க் ஸ்மிதாவை தங்கள் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தியவர்கள். அந்த சைக்கோக்களை எப்படி ஆளுமையாக ஏற்றுக்கொள்ள முடியும். இந்த திரையுலக அரசியலில் நாம் சில்க் ஸ்மிதாவை இழந்திவிட்டோம். அவர் உண்மையிலேயே மாபெரும் நடிகை, நாங்கள் உங்களை எப்போதும் மறக்கமாட்டோம் சில்க் ஸ்மிதா மேடம் என குறிப்பிட்டுள்ளார்.

DSFdsf

அதேபோல் இன்னொரு பதிவில், ஒரு பெண் மனதார விருப்பப்பட்டோ அல்லது வற்புறுத்தியோ பல ஆண்களுடன் படுக்கையை பகிர நேர்ந்தால் அவளுக்கு கேவலமான பட்டத்தை கொடுத்து அசிங்கமா பேசுகிறீர்கள். இதையே ஒரு ஆண் செய்தால் இந்த சமுதாயம் கண்டுகொள்வதில்லை. உங்கள் பார்வையில்தான் கோளாறு, திருந்துங்கள் என பதிவு செய்துள்ளார். சில்க் ஸ்மிதா பற்றிய பதிவுக்கு திரையுலக பிரபலங்கள் யாரும் இதுவரை எதிர்வினை ஆற்றவில்லை.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி! சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்

சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு...

குடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற இளநீர் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது!

2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...

ஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...
Do NOT follow this link or you will be banned from the site!