Home சினிமா பார்த்திபன் விலகலுக்கு காரணம் இது தான்?

பார்த்திபன் விலகலுக்கு காரணம் இது தான்?

இளையராஜா 75 நிகழ்ச்சியில் பாத்திபன்  கருத்தை யாரும் கேட்கவில்லை என்பதால் தான் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்த்திபன் விலகலுக்கு காரணம் இது தான்?

சென்னை : இளையராஜா 75 நிகழ்ச்சியில் பாத்திபன்  கருத்தை யாரும் கேட்கவில்லை என்பதால் தான் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பார்த்திபன் தீவிர இளையராஜா ரசிகர் என்பது அனைவரும் அரிந்ததே. அதனால் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு நடத்தும் பாராட்டு விழாவில் பார்த்திபனின் வித்தியாசமான யோசனையால் மேடையை அழகுபடுத்துவார் என்பதால் விழாக்குழுவில் பார்த்திபனுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. அவரும் எப்படியெல்லாம் விழாவை சிறப்பிக்கலாம் என்று  பல்வேறு  ஐடியாக்களை விழாக்குழுவில் வைக்க தயாரானார். 

ilaiyaraja

அவர் கொடுத்த ஐடியாக்களில் ஒன்றுதான் இருபது ஆர்மோனியத்தை மேடையில் வைத்து அதில் எல்லாவற்றிலும் வாசித்தால் இளையராஜாவின் டியூன் வருகிறதா அல்லது இளையராஜாவின் ஆர்மோனியத்தில் வாசித்தால் மட்டும்தான் அவர் பாடல்களின் டியூன் வருகிறதா என்பதை மேடையிலேயே செய்து காட்டும்படி இளையராஜாவிடம் பார்த்திபன் வேண்டுகோள் வைக்க,  ராஜாவும் எல்லா ஆர்மோனியத்திலும் தன்னுடைய பாடல்களையும் புதிய பாடலுக்கான டியூனையும் வாசித்துக்காட்டுவார். இப்படியொரு ஐடியாவை வைத்துக்கொண்டுதான் இருபது ஆர்மோனியத்தை கேட்டிருக்கிறார் பார்த்திபன். ஆனால் அதெல்லாம் தரமுடியாது என்று கூறிவிட்டார்கள். 

vishal

மேலும் அழைப்பிதழை வெறும் இரண்டு பக்கமாக அச்சிடாமல் இளையராஜா ஆயிரம் படங்களை தாண்டியதை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு படத்தையும் அச்சிட்டு ஆயிரம் பக்கமாக கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த கோபத்தில் விழாக்குழுவிலிருந்து விலகிக்கொண்டார் பார்த்திபன். 

அவரை பலரும் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இப்போது ராஜா நிகழ்ச்சிக்கு புதிய சட்டை ஒன்றை தைத்திருக்கிறார். அதில் ஆர்மோனியத்தின் கருப்பு வெள்ளைக் கட்டைகள் இருப்பது போல் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. தனக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினரால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கவலைப்படாமல் இளையராஜாவின் ரசிகனாக நிகழ்ச்சியைப் பார்க்க இருக்கிறார். 

parthipan

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் நேற்று அறிவித்திருக்கிறார் பார்த்திபன் இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.  இதற்கு முன் தனது டிவிட்டர் பக்கத்தில் சுயம் பாதிக்கப்படும் போது சோறு இரண்டாம் பட்சம்தான் என்றும் கடுமையாக தாக்கி எழுதியிருக்கிறார். அனேகமாக விழா முடிந்த பிறகு இந்தக் கோபமெல்லாம் வெடித்து தயாரிப்பாளர் சங்கத்திற்குள் புகைச்சல் கிளம்பலாம் என்று தெரிகிறது. 
 

பார்த்திபன் விலகலுக்கு காரணம் இது தான்?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews