Home சினிமா பார்த்திபன் சாபம் பலித்தது

பார்த்திபன் சாபம் பலித்தது

இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் அதற்கு பார்த்திபன் விட்ட சாபம் தான் என்று பலரும் விமர்சனம் தெரிவித்துவருகின்றனர்

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் அதற்கு பார்த்திபன் விட்ட சாபம் தான் என்று பலரும் விமர்சனம் தெரிவித்துவருகின்றனர்.

இளையராஜா 75 நிகழ்ச்சி இசைரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து அதிக ரசிகர்கள் வந்து கலந்துகொண்டனர். ஆனால் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தவர்கள் கூட வெகுதூரத்தில் அமர்ந்து பார்க்கும்படி ஆனதுதான் பெரிய குறை.அதோடு முதல் நாள் நிகழ்ச்சியாக கவர்னர் குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகளை செய்தனர். எந்த ஒருங்கிணைப்பும் கிடையாது.  கூடவே தமிழ்த்தாய் வாழ்த்தை மரு உருவாக்கம் செய்து இஷ்டத்துக்கு இசையமைத்து ஒலிக்கவிட்டனர். இது பெரிய சர்ச்சைக்குள்ளானது. முதல் நிகழ்ச்சி இப்படி ஏகத்துக்கும் சொதப்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக மைந்தது. 

இது பார்த்திபனின் சாபமோ என்னவோ இந்த நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரகுமானை அழைத்து வருவதில் முக்கிய பங்கு பார்த்திபனுக்கு இருந்தது. அவர்தான் அவரை அன்பால் இறுக்கி அழைத்து வந்தார். ஆனால் நிகழ்ச்சியில் பார்த்திபன்  எங்கும் கலந்து கொல்லாமல் வெளியிலேயே இருந்து விட்டார். இந்தத் தகவல் ராஜாவுக்கும் சொல்லப்பட்டது. ஆனாலும் பார்த்திபன் முடிவில் மாற்றம் இல்லை. அவரை மிகுந்த மனவேதன்க்கு உட்படுத்தியதால்  நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்ந்தே விட்டார். ஆனால் அதே சமயம் தான் அழைத்ததால் நிகழ்ச்சிக்கு வந்த ரகுமானை கூடவே இருந்து வரவேற்று, அவரை மிண்டும் காரில் ஏற்றி அனுப்பி விட்டுச் சென்றார்.

அதோடு மட்டுமில்லாமல் இதே போன்றொரு இசைசம்பவத்தை தனியாக நான் நடத்திக் காண்பிப்பேன் என்று கூறியுள்ளார். இது ஏதோ கோபத்தில் கூறும் வார்த்தைகளாலல்ல. இளையராஜா பார்த்திபன் மீது வைத்திருக்கும் அன்பினால் இதை சாத்தியப்படுத்துவார் பார்த்திபன்.

அவர் செய்ய நினைத்த புதுமையான ஐடியாக்கலை ரகுமானை மேடையில் வைத்துக்கொண்டே செய்வார். அதில் ஒன்று இலையராஜவை மேடையில் ஒரு சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டு அவரது பாடல்களை ஏ.ஆர்.ரகுமானை வாசிக்க வைக்க வேண்டும் என்பதுதான். அதையும் பார்த்திபன் செய்து காட்டுவர். இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்ட காயத்தை ஆற்றிக்கொள்வார்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது.. திக்விஜய சிங்

கமல் நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது நியாயமற்றது என்று காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்தார். மத்திய...

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு

மகாராஷ்டிராவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க சிவ சேனா முடிவு செய்துள்ளது. இது சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடவுளே முதல்வரானாலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்க முடியாது… பா.ஜ.க. முதல்வர்

நாளையே கடவுள் முதல்வரானாலும் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது என்று கோவா பா.ஜ.க. முதல்வர் தெரிவித்தார். கோவாவின் பானாஜியில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்...

விலை உயர்வு எதிரொலி.. உ.பி.யில் வெங்காயம், உருளை கிழங்கு வீடு வீடாக விற்பனை.. யோகி அரசு அதிரடி நடவடிக்கை

விலை உயர்வை எதிரொலியாக உத்தர பிரதேசத்தில் வேனில் வீடு வீடாக சென்று வெங்காயம் மற்றும் உருளை கிழங்கை விற்பனை செய்யும் நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!