Home உலகம் பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலய தீ விபத்துக்கு காரணம் இது தானா? ரகசியம் உடைத்த அதிகாரிகள்!

பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலய தீ விபத்துக்கு காரணம் இது தானா? ரகசியம் உடைத்த அதிகாரிகள்!

பயங்கரமான தீ விபத்தினால் கட்டடத்தின் சுவர்கள் வலுவிழந்து இருக்கலாம் என்பதால் கட்டடத்தின் நிலைத் தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருந்தனர்

பாரீஸ்: உலகப்புகழ் பெற்ற பாரீஸ் நோட்ரா-டாம் தேவாலய தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த தகவலை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற நோட்ரா-டாம் தேவாலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாகவும், பிரான்சின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்து வரும் இந்த இந்த 800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

notre dame

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தீ விபத்து ஏற்பட்டது. முதலில் மேற்கூரையில் ஏற்பட்ட தீ, கொஞ்சம், கொஞ்சமாக தேவாலயம் முழுவதும் பரவியது. பின்னர் தேவாலயத்தின் கோபுரத்தில் தீப்பற்றியது. மரச் சாமான்கள் மற்றும் ஈயத்தால் செய்யப்பட்டது என்பதால் தீ மளமளவென எரிந்து அந்தக் கோபுரம் சரிந்து விழுந்தது.

உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை கொண்டு வந்தனர். ஆனால், பயங்கரமான தீ விபத்தினால் கட்டடத்தின் சுவர்கள் வலுவிழந்து இருக்கலாம் என்பதால் கட்டடத்தின் நிலைத் தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

notre dame

இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை தேவாலயத்தினுள் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, மின்மயமாக்கப்பட்ட மணிகளில் ஏற்பட்ட குறைவான மின் அழுத்தம் அல்லது விதிகளை மீறி அப்பகுதியில் காணப்பட்ட சிகெரெட் துண்டுகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

notre dame

அதேசமயம், பயங்கரமான தீ விபத்து மற்றும் அதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்திய டன் கணக்கிலான தண்ணீர் உள்ளிட்டவைகள் தீ விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்களை அழித்திருக்க வாய்ப்பிருப்பதால் அதனை கண்டறிவது கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு வரை நோட்ரா-டாம் தேவாலய கட்டடக்கலைக்கு பொறுப்பு வகித்து வந்த பெஞ்சமின் மவுண்டன், கட்டடத்தின் உத்திரங்களுக்கு இடையே விளக்குகளை அமைத்தால் அது தீ விபத்துக்கு வழிவகுக்கும் என 2010-ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் வாசிங்க

சென்னையில் மைனஸ் 3 டிகிரி கடுங்குளிரில் கொத்து கொத்தாக மக்கள் செத்தது உங்களுக்கு தெரியுமா!?

மாவட்ட செய்திகள்

Most Popular

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட...

’பிக்பாஸ் வீட்டில் உருவானது மூன்றாவது அணி! –ஆனா…’ பிக்பாஸ் 53-54-ம் நாள்

புயல், மழை காரணமாக போட்டியாளர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர் என்று செய்திகள் முன்பே வந்தன. ஆனால், அதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் செய்தித் தொடர்பாளர் மறுத்து கூறியிருந்தார். ஆனால், நேற்றைய எப்பிசோட்டில்...

மணல் கொள்ளையர்களால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்!

பாலாற்று வெள்ளத்தில் சிக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த...

கொரோனா தடுப்பூசி : பிரதமர் மோடி இன்று ஆய்வு!

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா...
Do NOT follow this link or you will be banned from the site!