Home அரசியல் பாமக- திமுக கூட்டணி... உள்ளாட்சி தேர்தலால் வெறுப்பான அன்புமணி..!

பாமக- திமுக கூட்டணி… உள்ளாட்சி தேர்தலால் வெறுப்பான அன்புமணி..!

பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக ஆட்சி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசிய சம்பவத்தால் அதிமுக- பாமக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக ஆட்சி இல்லை என்று அன்புமணி ராமதாஸ்  பேசிய சம்பவத்தால் அதிமுக- பாமக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. பாமக சார்பில் புத்தாண்டு சிறப்புப் பொதுக்கூட்டம் திண்டிவனத்தை அடுத்த ஓமாந்தூரில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அன்புமணி ’’பாமக கட்சி ஆரம்பித்து முப்பது ஆண்டுகாலம் ஆகுது. ஆனால் இன்னும் ஆட்சிக்கு வர முடியவில்லை. பாமக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல சாதனைகள் செய்து இருக்கிறது.  தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. அதில் மாற்று கருத்து இல்லை.

stalin

அதிமுகவுடன்- பாமக கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அவர்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியாது. மக்களவை தேர்தல் நடைபெற்ற அதே நேரத்தில் 23 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது ஆட்சி நீடிக்கவேண்டும் என்று அதிமுக நம்மிடம் கேட்டுக் கொண்டது. அதனால் தான் அனைத்து தொகுதிகளையும் விட்டுக் கொடுத்தோம்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலில் கட்சியில் நிறைய சீட் கொடுங்கள் என்று நான் கேட்டதற்கு காத்திருக்க வைத்தார்கள். அதுவும் அந்தந்த மாவட்ட அதிமுக செயலாளர்களிடன் சீட்டுக்கட்டு பேச்சுவார்த்தை செய்ய சொல்கிறார்கள். அதனால் அதிமுக அமைச்சர்கள் நமக்கு குறைந்தளவிலேயே சீட்டு கொடுத்தனர். பாமகவின் கூட்டணியை வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.ramadoss

 சில மன வருத்தங்கள் ஏற்பட்டிருந்தாலும் நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு உள்ளனர். கூட்டணிக்கு சென்றாலும் கொள்கையில் எள்ளளவும் கூட பின்வாங்கவில்லை. பின்வாங்க போவதும் இல்லை. நம்முடைய கொள்கையை விட்டுக் கொடுக்கவும் இல்லை. அதிமுக வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இடைத்தேர்தலில் பல மாற்றங்களை அதிமுகவை வெற்றி பெற வழி செய்தது. விரைவில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இனி வரும் காலங்களில் ஆளும் கட்சியின் தலைமை எங்களது கருத்துக்களை எல்லாம் நேற்று பாமகவின் கோரிக்கைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்று இந்த பொதுக்குழு மூலம் அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். 

திமுக பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது சமூக வலைதளங்களை தனக்கு ஆதரவாக மற்ற கட்சிகளுக்கு எதிராகவும், திருப்பும் முயற்சியில் இருக்கிறார்கள். அதற்காக ஒரு பதிவு ரூபாய் 200 வரை செலவு செய்கிறார்கள். பொய் செய்திகளை பரப்புவது திமுகவுக்கு கைவந்த கலை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியபோது ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நிர்வாகிகள் தொண்டர்கள் உழைக்கிற உழைப்பால் 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளைப் பெற கூடிய நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் அப்படி வாக்குகளை பெற முடிந்தால் பாமக ஆளும் கட்சியாக மாறும் அன்புமணியின் முப்படைகளில் வேலையைப் பொறுத்து ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை பெறும் படி செய்ய வேண்டும்.stalin

உறுப்பினர் சேர்க்கை போல் இல்லாமல் உண்மையான வாக்காளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் கட்சியின் பொறுப்புகளில் உள்ளவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் அப்போதுதான் பாமக ஆட்சியில் அமர முடியும் கட்சியின் திட்டங்களை தயாரிக்க 3 பேர் கொண்ட குழுவை பாமக மாநில தலைவர் அமைக்க வேண்டும் என்றார். அதிமுகவிற்கு எதிராக அன்புமணி பேசியிருப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘உலக எய்ட்ஸ் தினம்’ : அரசு மருத்துவமனையில் நடந்த விழுப்புணர்வு நிகழ்ச்சி!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று எய்ட்ஸ் தினத்தையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ்...

“புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்” – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தென் தமிழகத்தில் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். வங்கக்...

“என் அக்காவின் போட்டோவை வச்சுக்கிட்டு …”16வயது சிறுவன் செய்த வேலையால் கொலை செய்த நண்பன் .

தன்னுடைய நணபரின் சகோதரியின் போட்டோவை ஊடகத்தில் வெளியிட்ட கோபத்தில் அவரின் நண்பர்களால் அந்த டீனேஜ் சிறுவன் அடித்து கொல்லப்பட்டான்.

காதல் கணவனின் ஆன்லைன் ரம்மி மோகம் : நடுத்தெருவுக்கு வந்த இளம்பெண்!

ஆன்லைன் ரம்மியால் நகைகளை இழந்த பெண் கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தக்காட்டூரை சேர்ந்தவர் தமிழ்செல்வி....
Do NOT follow this link or you will be banned from the site!