Home வணிகம் பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பானாமா பேப்பர்ஸ் விவகாரம்: 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லி: பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு 400 இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்து சர்ச்சையை கிளப்பியது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism) இந்த தகவலை வெளியிட்டது.

அதன்மூலம், கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபலங்கள் பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அம்பலமானது.

இந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில்,  பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியர்கள் 400 பேருக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆய்வு நடத்திய வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் அவர்கள் அனைவரிடமும் கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...

ஸ்டாலின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்து பொளந்து கட்டும் எடப்பாடி!

அதிமுக அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களையும் பொய் குற்றச்சாட்டுகளையும் கூறி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல்...

“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .

ஒரு 12 வயதான பெண் காட்டுக்கு புல் வெட்ட சென்ற போது பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது .
Do NOT follow this link or you will be banned from the site!