பாண்ட்யாவை கழற்றிவிட்ட பாலிவுட் நடிகை… ரிஷப்பை பிடித்தார்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்த பாண்ட்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகை மற்றொரு கிரிக்கெட் வீரரான ரிஷப் பாண்ட்டுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. உடல்நலக் குறைவு காரணமாக ஓய்விலிருந்துவந்தார். அவரையும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதெலாவையும் இணைத்து சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கள் பகிரப்பட்டுவந்தன.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்த பாண்ட்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட பாலிவுட் நடிகை மற்றொரு கிரிக்கெட் வீரரான ரிஷப் பாண்ட்டுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

pandya and uruvashi

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. உடல்நலக் குறைவு காரணமாக ஓய்விலிருந்துவந்தார். அவரையும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதெலாவையும் இணைத்து சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கள் பகிரப்பட்டுவந்தன. இருவரும் டேட்டிங் சென்றதாக கூட கூறப்பட்டது. அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா தற்போது நடாஷா ஸ்டான்கோவிக் என்ற மாடலுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

uruvashi and pant

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான ரிஷப் பாண்ட்டுக்கும் நடிகை ஊர்வசிக்கும் நட்பு உள்ளது என்று கிசுகிசுக்கள் பரவி வருகிறது. மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்பு ரிஷப்பும் ஊர்வசியும்  இரவு விருந்தில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிஷப் தன்னுடைய காதலி இஷாவுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “உன்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறேன்… ஏனெனில் என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி நீ” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், காதலியை விட்டுவிட்டு நடிகையுடன் ரிஷப் டேட்டிங் சென்றுள்ளார் என்று பரவும் செய்தி சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...