Home க்ரைம் பாட்டி வீட்டில் வளர்ந்த வந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை! பதறவைக்கும் சம்பவம்

பாட்டி வீட்டில் வளர்ந்த வந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை! பதறவைக்கும் சம்பவம்

திண்டிவனம் அருகே உள்ள தென்நெற்குணம் கிராமத்தைச்  சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 9 வயதில் ஒரு பெண்ணும், 7வயதில் இரண்டாவது குழந்தையும் உள்ளன.அந்த பெண்ணை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டதால், குழந்தைகளைத் தனது தாய்  பராமரிப்பில் விட்டுச் சென்று விட்டார். 

பாட்டி வீட்டில் வளர்ந்த வந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை! பதறவைக்கும் சம்பவம்

திண்டிவனம் அருகே உள்ள தென்நெற்குணம் கிராமத்தைச்  சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 9 வயதில் ஒரு பெண்ணும், 7வயதில் இரண்டாவது குழந்தையும் உள்ளன.அந்த பெண்ணை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டதால், குழந்தைகளைத் தனது தாய்  பராமரிப்பில் விட்டுச் சென்று விட்டார். 

வேலைக்காக புதுச்சேரிக்குச் சென்ற அந்த பெண் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் அந்த தொழிலாளியுடன் கோரிமேட்டில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர் பல மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளைப் பார்க்க அந்த பெண் தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமிகள் 2 பேரும் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அழுது கொண்டே கூறியுள்ளனர். இதனால் உடனே அந்த குழந்தைகளை அவர் தன்னுடன் புதுச்சேரிக்கு அழைத்துக் சென்றுள்ளார். பிறகு அங்கு உள்ள அரசு பள்ளியில் சேர்த்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 வயது சிறுமி திடீரென பள்ளியில் மயங்கி விழுந்தார். அவரது தங்கையும் சோர்வுடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அந்த சிறுமிகள் இருவரையும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அந்த சிறுமிகளைப் பரிசோதித்த போது தான் தெரிய வந்துள்ளது அவர்கள் உடல் முழுவதும் பல இடங்களில் காயம் இருந்தது. அதுமட்டுமின்றி அந்த இரண்டு சிறுமிகளும் பல மாதங்களாகக் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

abused

இது தொடர்பாக குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நலக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் நேரில் சென்று அந்த சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது சிறுமிகள் தங்கள் பாட்டி வீட்டிலிருந்த போது தனது தாய் மாமன் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் சிறுமிகளின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தனது தம்பியின் மூலமாகத் தனது குழந்தைகளுக்கு நடந்த விபரீதத்தை அப்பெண்மணி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளின் தாய் மாமனான கஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் ரவிக்குமார், பிரபாகரன், அஜீத், தீனதயாளன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். 

பாட்டி வீட்டில் வளர்ந்த வந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை! பதறவைக்கும் சம்பவம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் 3ஆம் அலைக்கு வாய்ப்பில்லை! மறைந்து போன கொரோனா!!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.22 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

இந்தியாவில் புதிய உலக அதிசயம்! மோடி மகிழ்ச்சி

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவிரா நகரை யுனெஸ்கோ அங்கிகரித்து அறிவித்துள்ளது. இதுவரை உலக பாரம்பரிய சின்னங்களின்...

போலீசாரிடம் மீண்டும் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மீண்டும் போலீசாரிடம் அத்துமீறிய ஹெச்.ராஜா மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை...

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கி தொடர்பான...
- Advertisment -
TopTamilNews