Home ஆன்மிகம் பாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்

பாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்

திருநெல்வாயில் அரத்துறை.இந்தப்பழம் பெயர் இப்போது மாறிவிட்டது. இப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள இந்த ஊரின் பெயர் திருவட்டத்துறை ஆகிவிட்டது. விருத்தாசலம் தொழுதூர் சாலையில விருத்தாசலத்துக்கு தென்மேற்கில் கொடிகளம் என்கிற சிற்றூர் இருக்கிறது. அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் இத்தலம் இருக்கிறது.

திருநெல்வாயில் அரத்துறை.இந்தப்பழம் பெயர் இப்போது மாறிவிட்டது. இப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள இந்த ஊரின் பெயர் திருவட்டத்துறை ஆகிவிட்டது. விருத்தாசலம் தொழுதூர் சாலையில விருத்தாசலத்துக்கு தென்மேற்கில் கொடிகளம் என்கிற சிற்றூர் இருக்கிறது. அங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் இத்தலம் இருக்கிறது.

திருஞானசம்பந்தர் உமையாளிடம் ஞானப்பால் அருந்தி சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்கள் தோறும் சென்று பதிகம்பாடியபடி வந்துகொண்டிருந்தார்.சம்பந்தர் சிறு குழந்தையாகையால் அவருடைய தந்தை தோளில் அமர்ந்துதான் தலயாத்திரை சென்றுகொண்டு இருந்தார். 

 

திருத்தூங்காணை மடம் கோவிலைத் தரிசித்துவிட்டு புறப்பட்ட போது தந்தையின் தோளில் ஏற மறுத்து திருநெல்வாயில் அறத்துறை நோக்கி தன் சிற்றடிகளால் எட்டுவைத்து நடக்கத் துவங்கினார்.இதை பார்த்த வழிப்போக்கர்களும்,சம்பந்தரின் உடன் வந்தோரும் மனமுருகினர்.வழியில் மாறன்பாடி என்கிற ஊறில் யாத்திரிகர்கள் இரவு தங்கினர்.

அன்றிரவு திருநெல்வாயில் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி, தான் அளிக்கும் முத்துச் சிவிகை,முத்துக்குடை ஆகியவற்றை எடுத்துச் சென்று சம்பந்தரை அந்த சிவிகையில் இருத்தி அழைத்து வாருங்கள் என்று சொன்னாராம். ஆலய ஊழியர்கள் உடனே ஆலயத்தை திறந்து பார்க்க அங்கே முத்துச்சிவிகை, முத்துக்குடை ஆகியன இருப்பதை பார்த்து பரவசமாகி,இறைவனைத் தொழுதுவிட்டு,மாறன்பாடி சென்று சம்பந்தரை முத்துச் சிவிகையில் ஏற்றி, முத்துக்குடை பிடித்து அறத்துறை நாதர் ஆலயத்துக்கு அழைத்து வந்தார்களாம்.

இங்கே இறைவனின் பெயர் தீர்த்தபுரீசுவரர்.கிழக்கு நோக்கிய ஆலயம்.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்புரிகிறார்.பிரகாரத்தில் இருக்கும் விநாயகர், பிரம்மான், பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி துர்க்கை, சண்டேசுவரர் ஆகியோரை தரிசித்தபின் உள்ளே சென்றால் இறைவனுக்கும் அம்பிகைக்கும் தனித்தனி சன்னிதிகள், கொடிமரங்கள,பலி பீடம்,நந்தி இருப்பதை காணலாம்.

இத்தலத்து நந்தியின் தலை திரும்பிப் பார்த்ததால் வெள்ளாற்று வெள்ளம் வடிந்ததாகவும் ஒரு கதை வழங்குகிறது.மகாவிஷ்னு,ஆதிசேடன்,முதல் மூவேந்தர்களும் வழிபட்டதலம் இது.ஞான சம்பந்தரின் பாடல்களில் நிவா நதியென்று குறிப்பிட படும் ஆற்றின் பெயர் இன்று வடவெள்ளாறாகிவிட்டது. 

செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்.இக்கோவிலின் தல விருட்சம் ஆலமரம்.இது மக நட்சத்திரத்துக்கு உரியது .அதனால் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் நன்மைகள் நேரும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

’18 மணிநேரத்தில்’ கொள்ளையர்களை பிடித்த போலீஸுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு!

முத்தூட் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“சோறு கொடுக்க போன பெண்ணை கூறு போட்டுட்டிங்களே” -“பட்ட பகலில் வெட்ட வெளியில் நடந்த கொடுமை

தந்தைக்கு சாப்பாடு எடுத்து சென்ற ஒரு 15 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொடுமை நடந்துள்ளது . உத்திரபிரதேச...

ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் பலி

திருச்சி திருச்சி ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம்...

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. கொரோனாவால் தொழில்துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், பாதுகாப்பாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்தத்...
Do NOT follow this link or you will be banned from the site!