பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் மேட்டூர் அணை.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !

சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த மேட்டூர் அணையானது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.ஒரே ஆண்டில் 4 முறை மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது இதுவே முதன் முறையாகும். சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த மேட்டூர் அணையானது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

ttn

இந்த அணையின் 16 கண் மதகுகள் அருகே இருக்கும் நீர் அடர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இந்த நீர் அந்த பகுதியில் உள்ள குட்டைகளுக்குச் செல்வதால் அங்கு இருக்கும் மீன்கள் செத்து மிதந்து கிடந்தன.  அதுமட்டுமின்றி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த நீரை ஆய்வு மேற்கொண்டு இதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று மக்கள் கடந்த 4 ஆம் தேதி கோரிக்கை விடுத்தனர். 

ttn

10 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,  அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்திய படி, துர்நாற்றம் வீசும் அந்த மதகுகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 
 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...