Home சினிமா 'பாக்ஸர் அங்கிள் உங்க வேலையை பாருங்க...' அமைச்சர் ஜெயக்குமாரை பங்கமாக கலாய்த்த நடிகர் சித்தார்த்

‘பாக்ஸர் அங்கிள் உங்க வேலையை பாருங்க…’ அமைச்சர் ஜெயக்குமாரை பங்கமாக கலாய்த்த நடிகர் சித்தார்த்

சித்தார்த் எடப்பாடி பழனிசாமி அரசையும் அவரையும் கடுமையாக சாடி  இருந்தார். 

நடிகர் சித்தார்த்  பல்வேறு சமூக பிரச்சனைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி வருவதுடன் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட நேரத்திலும் களத்தில்  இறங்கி பணியாற்றினார்.

ttn

அந்தவகையில் சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்து சித்தார்த் எடப்பாடி பழனிசாமி அரசையும் அவரையும் கடுமையாக சாடி  இருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம்  கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சித்தார்த் யார் எந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று கேட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தார்த், என்னை யார் என்று அவர் கேட்டுள்ளார்.  ஒரு பிரச்னையும்  இல்லை. அவருடைய அரசு 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் என்று விருது வழங்கியுள்ளனர்.  2017-ம் ஆண்டு அறிவித்த விருது இன்னும்  கொடுக்கப்படவில்லை. நான் நேர்மையாகச் சம்பாதித்து இந்த இடத்தில் உள்ளேன்’ என்றார். 

தனது மற்றொரு பதிவிலோ, நாட்டு பிரச்னை குறித்து கவலை தெரிவிக்கும், வரி செலுத்தும் குடிமகன்களை அவமானப்படுத்திப் பேசியே தான்  நீங்கள் இந்த இடத்தை எட்டியுள்ளீர்கள் பாக்ஸர் அங்கிள். நீங்க ஒண்ணும் என்னை பெரிய ஆளாக்க தேவையில்லை. உங்கள் வேலையைப் பார்க்கவும். அது போதும். விரைவில் நலம் பெறவும்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள்” திருச்சியை கலக்கும் திமுக மாநாடு!

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காலை 11 மணிக்கு திருச்சி வரும் ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு விழாவில்...

உங்க புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?.. அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்க.. மத்திய அமைச்சர்

அரசு அதிகாரிகள் உங்கள் புகார் மீது நடவடிக்கையை எடுக்கவில்லையா, மூங்கில் குச்சியால் அவர்களை அடியுங்க என பொதுமக்களிடம் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11வது மாநில மாட்டுக்கான வேலைகள் நடந்து வந்த வேளையில் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் மாநாட்டினை சட்டமன்ற தேர்தலுக்கான பொதுகூட்டமாக நடத்துகிறது திமுக. இன்று...

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ : அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில்...
TopTamilNews