Home அரசியல் பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா..... காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்...

பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா….. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்…

காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் தொடர்பான தனது கவலைகளை காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹா ஒப்புக்கொண்டார் என பாகிஸ்தான் ஜனாதிபதி டிவிட் செய்துள்ளார். இது காங்கிரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் மியான் ஆசாத் அஹ்சன் தனது மகன் திருமணத்தில் பங்கேற்க வருமாறு சத்ருகன் சின்ஹாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதனையடுத்து லாகூரில் நடைபெறும் அந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் அங்கு சென்றார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியை சந்தித்த சத்ருகன் சின்ஹா

லாகூரில் கல்யாணத்துக்கு சென்ற சத்ருகன் சின்ஹா அங்கு கவர்னர் மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் அல்வியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் பேசிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி டிவிட்டரில், காஷ்மீர் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் தொடர்பான எனது கவலைகளை சத்ருகன் சின்ஹா ஒப்புக்கொண்டார் என பதிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த சித்து

2018ல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, அந்நாட்டு ராணுவ தளபதி குவாமர் ஜாவத் பாஜ்வாவை கட்டிப்பிடித்து  பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா, பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து, காஷ்மீர் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

திருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…

கோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...

கதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...

‘சி.எம்.ஆனதும் முதல் கையெழுத்து’ ஸ்டாலினுக்கு தங்க பேனா பரிசு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நேர்காணலை தொடங்கி நடத்தி முடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக கட்சிகள்...

பாத்ரூம் போன பெண் -ஜன்னலோரம் நின்ற ஆண் -லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த கொடுமை

ஒரு லேடீஸ் ஹாஸ்டெல் விடுதியில் ஒரு பெண் பாத்ரூம் போக வந்த போது ,ஒரு வாலிபர் நிர்வாணமாக நின்றதால் கைது செய்யப்பட்டார் .
TopTamilNews