பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பலை வதம் செய்ய 21 நாட்களாக தேடிய இந்திய கடற்படை!

பாலகோட் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானின் நவீன நீர்மூழ்கி கப்பலை வேட்டையாட இந்திய கடற்படை 21 நாட்கள் தேடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலை படை தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோத செய்து வெடிக்க செய்தான். இந்த தற்கொலை படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். 

விமான தாக்குதல்

தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலால் தேசமே கொதித்து எழுந்தது. இந்திய பிரதமர் மோடி பாதுகாப்பு தொடர்பான முழு அதிகாரத்தையும் ராணுவத்திடம் கொடுத்தார். இதனையடுத்து இந்திய விமான படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது. 

இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவின் முப்படைகளும் உஷார்படுத்தப்பட்டன. இந்தியாவுடன் மோதினால் நமக்கும்தான் சேதம் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும் மேலும் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை அடுத்து நம்மிடம் மோதாமல் பாகிஸ்தான் ராணுவம் அமைதியாக இருந்து விட்டது. 

பாலகோட்

இந்த சம்பவங்களுக்கு இடையே பாகிஸ்தானின் ஒரு நீர்மூழ்கி கப்பலை இந்திய கடற்படை 21 நாட்களாக தேடிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பாலகோட் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் பி.என்.எஸ். சாத் தலைமறைவானது. அந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு தொழில்நுட்பம் மூலம் மற்ற நீர்மூழ்கி கப்பல்களை காட்டிலும் நீண்ட நாட்கள் கடலுக்கு அடியில் இருக்க முடியும். அதனால் அந்த கப்பல் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் இந்திய கடற்படைக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

அந்த கப்பல் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் பதிலடி கொடுக்க தேவையான முன்ஏற்பாடுகளை இந்திய கடற்படை செய்தது. மேலும், அந்த கப்பலை வேட்டையாட நீர்மூழ்கி போர் கப்பல் எதிர்ப்பு கப்பல்கள் மற்றும் விமானங்களை இந்திய கடற்படை பயன்படுத்தியது. பாகிஸ்தானின் பி.என்.எஸ். சாத் கப்பல் கராச்சி கடல் பகுதியில்தான் மறைந்தது. இதனையடுத்து அந்த கடல் பகுதியில் கண்காணிப்பை இந்திய கப்பற்படை தீவிரப்படுத்தியது.

சுமார் 21 நாட்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் பி.என்.எஸ். சாத் நீர்மூழ்கி கப்பல் மறைந்து இருந்த இடத்தை இந்திய கடற்பறை கண்டுபிடித்தது. பாகிஸ்தான் தனது கடல் எல்லையில்தான் அந்த கப்பலை மறைத்து வைத்து இருந்தது.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!