பழிக்குப் பழி : சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை !

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முரளி. இவர் 2017 ஆம் ஆண்டு மற்றொரு ரவுடி கும்பலால் கொலை செய்யப் பட்டார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி முரளி. இவர் 2017 ஆம் ஆண்டு மற்றொரு ரவுடி கும்பலால் கொலை செய்யப் பட்டார். முரளி கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 11 பேரில் சுந்தர் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அமரன் என்பவரும் 2 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். மீதமுள்ள 9 பேரும் ஜாமீன் பெற்று வெளியே உள்ளனர்.

murede r

முரளி கொலை வழக்கு நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் எழுந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி 11 பேருக்கும் விடுதலை அளித்து உத்தரவிட்டார். ஆனால், சுந்தர் குண்டர் சட்டத்தில் கைதானதால் வெளியே வர முடியாத நிலையில், அமரன் மட்டும் சிறையிலிருந்து நேற்று வெளியே அனுப்பப் பட்டார். 

murder

முரளியின் ஆதரவாளர்களால் முருகன் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவரை பாதுகாப்பாக அவரது சகோதரி வீட்டில் அழைத்துச் செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது வழியில் மது அருந்துவதற்காக பெருங்குழி என்னும் இடத்தில் காரை நிறுத்தியுள்ளனர். காரில் அமரனை பின்தொடர்ந்து வந்த மற்றொரு ரவுடி கும்பல் அமரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

amaran

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அமரனின் உடலை மீட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முரளியின் ஆதரவாளர்கள் தான் அமரனைக் கொலை செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அமரன் கொலை வழக்கில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...