பழநி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல:பிரியாணியும் ஃபேமஸ்தான்! அம்சவல்லிக்கு வாங்க

பழநி ஆர்.எஃப் ரோட்டில் இருக்கிறது இந்தப் பழைமையான ( 1961 ) உணவகம்.உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் சுவரை ஒட்டி வரிசையாக உணவு மேசைகள் போடப்பட்டு இருக்கின்றன.கல்லாவில் இருக்கும் பெண் மைக்கில்தான் கிச்சனுக்கு ஆர்டர் தருகிறார்.

சுவற்றில்,பிரியாணிக்கு இலவச சாப்பாடு கிடையாது,சைவக் குழம்புகள் கிடையாது என்று ஸ்ட்ரிக்டாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

பழனி ஆர்.எஃப் ரோட்டில் இருக்கிறது இந்தப் பழைமையான ( 1961 ) உணவகம்.உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் சுவரை ஒட்டி வரிசையாக உணவு மேசைகள் போடப்பட்டு இருக்கின்றன.கல்லாவில் இருக்கும் பெண் மைக்கில்தான் கிச்சனுக்கு ஆர்டர் தருகிறார்.

hotel

சுவற்றில்,பிரியாணிக்கு இலவச சாப்பாடு கிடையாது,சைவக் குழம்புகள் கிடையாது என்று ஸ்ட்ரிக்டாக எழுதி வைத்திருக்கிறார்கள்.குடும்பத்தோடு வருகிறவர்களுக்கு மாடி ஹாலில் இடம் தருகிறார்கள்.இவர்களின் சாப்பாட்டை விட பிரியாணிக்குத்தான் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

food

ஊட்டி,கொடைக்கானல் போல பழநியும் ஒரு சுற்றுலாத் தலம்தான்.தினமும் புதுப்புது ஆட்கள்தான் வருவார்கள்.ஆனாலும் அம்சவல்லிக்கு தேடிவரும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் பிரியாணி ருசிக்கு இவர்களின் கைபக்குவம்,சொந்தமாக அரைத்துச் சேர்க்கும் மசாலா இவற்றுடன் இந்தப் பகுதியில் வளர்க்கப்படும் மைலம்பட்டி ஆடும் ஒரு காரணம்.எப்போதும் வெள்ளாடுதான்,அதுவும் மைலம்பட்டி ஆடுதான்.

food

பிரியாணிக்கு ஒரு ரைத்தா மட்டுமே தருகிறார்கள். விலை 180 ரூபாய்தான்.
இது தவிர வளக்கமான சுக்கா,கொத்துக்கறி,குடல் , செட்டிநாடு சிக்கன் கிரேவி போன்ற ரெகுலர் ஐட்டங்களும் இருக்கின்றன. இவர்களின் சிக்னேச்சர் டிஷ்கள் என்று மூன்று விசயங்களைச் சொல்லலாம்.ஒன்று , சிக்கன் மஞ்சூரியன். அளவான காரத்துடன் மசாலாத் தடவி பொரித்த கோழித் துண்டுகளுடன், நிறைய நட்ஸ் சேர்த்து ஒரு தட்டு நிறையத் தருகிறார்கள். இரண்டு பேருக்கு ஒன்று வாங்கினால் போதும்.குழந்தைகளுக்கும் தாராளாமாகத் தரலாம்.

food

அடுத்தபடியாக கிராமத்து மட்டன் ,கிராமத்து சிக்கன் என்று இரண்டு ஐட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து அளவான மசாலாவுடன் தரப்படும் மிக எளிமையான தயாரிப்புகள். இரண்டுமே சுவையாகவும் தரமாகவும்  இருக்கின்றன.

hotel

ஆனால்,அம்சவல்லி என்றால் பிரியாணிதான் என்பதை மறந்து விடாதீர்கள்.தட்டில் பிரியாணியின் மீது அமர்ந்து வரும் மைலம்பட்டி ஆட்டுக்கறியை கண்ட உடனே காதல் கொண்டு விடுவீர்கள்.அத்தனை மென்மை,அத்தனை சுவை.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...