Home அரசியல் ‘பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கிறார்கள்’பொது மேடையில் போட்டுத்தாக்கிய  கருணாஸ் எம்.எல்.ஏ..

‘பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்கிறார்கள்’பொது மேடையில் போட்டுத்தாக்கிய  கருணாஸ் எம்.எல்.ஏ..

ராமநாதபுரம் மாவட்டம் அமைச்சர் மணிகண்டன் கண்ட்ரோலில்  இருந்தவரை தொகுதிப் பக்கம் , மட்டுமல்ல சிவகங்கை மாவட்ட எல்லையையே தாண்டாமல் பம்மித் திரிந்தவர் எம்.எல்.ஏ கருணாஸ்.டாக்டர் மணிகண்டனின் பதவி பறிப்புக்குப் பிறகு தனது திருவாடானை தொகுதியில் மட்டுமல்ல , ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கே அரசுவிழா நடந்தாலும் முதல் ஆளாக ஆஜாராகி விடுகிறார். அதோடு அன்றைய மாலை பத்திரிகைச் செய்திகளிலும் இடம் பிடித்து விடுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் அமைச்சர் மணிகண்டன் கண்ட்ரோலில்  இருந்தவரை தொகுதிப் பக்கம் , மட்டுமல்ல சிவகங்கை மாவட்ட எல்லையையே தாண்டாமல் பம்மித் திரிந்தவர் எம்.எல்.ஏ கருணாஸ்.டாக்டர் மணிகண்டனின் பதவி பறிப்புக்குப் பிறகு தனது திருவாடானை தொகுதியில் மட்டுமல்ல , ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கே அரசுவிழா நடந்தாலும் முதல் ஆளாக ஆஜாராகி விடுகிறார். அதோடு அன்றைய மாலை பத்திரிகைச் செய்திகளிலும் இடம் பிடித்து விடுகிறார்.

karunas

உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால் அதிமுகவினர் தமிழகமெங்கும் அங்கங்கே அமைச்சர்களை அழைத்து குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தி , நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளாட்சி ஓட்டுக்களை முன்பதிவு செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு விழா,பரமக்குடியில் நடைபெற்றது.பரமக்குடி ஆரியவைசியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.இந்த விழாவில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ கருணாஸ் வழக்கம் போல மாலைப் பத்திரிகைகளுக்கு சூடான செய்தி கொடுத்தார்!. அதைக்கேட்டு அமைச்சரும் மற்ற அதிமுக உள்ளூர் பொறுப்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

crowd

‘பரமக்குடியில்,பள்ளி மானவர்களைக் குறிவைத்து,பட்டப்பகலில் பகிரங்கமாக கஞ்சா விற்கப்படுகிறது’ என்று அமைச்சர் உதயகுமாரை மேடையில் வைத்துக் கொண்டே கருணாஸ் பேசியதும், மற்ற எம்.எல்.ஏக்கள்,கட்சி தொண்டர்கள் எல்லோரும் திகைத்துப் போய நின்றனர்.அதிமுகவின் ஆட்சியில்,பட்டப்பகலில் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக,அதிமுக ஆதரவு பெற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசினால் அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருக்காதா?

இனி அந்த பக்கம் நடக்கும் கூட்டங்களுக்கு கருணாஸ் அழைக்கப்படுவது சந்தேதான்.

Most Popular

கொரோனா உயிரச்சம் – பிரபலங்களே பத்திரம் !

கொரோனா தொற்று உலகம் முழுவதும் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டு நலம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும்,...

தமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு! 66 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியே 19 லட்சமாக அதிகரித்துள்ளது. 9 லட்சத்து 77 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

கோவை: 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள் வழங்கினார் அமைச்சர் வேலுமணி

கோவையில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள், மற்றும் செவித்திறன் கருவிகளை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கோவை மாவட்ட ஆட்சியர்...

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கை இலங்கை பாராளுமன்றத்தில் நிராகரிப்பு

இந்தியாவில் அண்டை நாடான இலங்கையில் தமிழர் உரிமைக்காக பல்வேறு குழுக்கள் போராடின. சில அகிம்சை ரீதியாகவும் சில ஆயுதக் குழுக்களாகவும். ஆயுதக்குழுக்களில் முதன்மையாக இருந்தது விடுதலைப் புலிகள்.
Do NOT follow this link or you will be banned from the site!