Home தமிழகம் பள்ளி மாணவர்களுக்குத் தலைவாழை விருந்து : சொந்த செலவில் பிரியாணி பரிமாறிய சத்துணவு பணியாளர்!

பள்ளி மாணவர்களுக்குத் தலைவாழை விருந்து : சொந்த செலவில் பிரியாணி பரிமாறிய சத்துணவு பணியாளர்!

தன் கையால் சாப்பிடும் மாணவர்களுக்கு ஒரு நாளாவது தலைவாழையில் விருந்து அளிக்க வேண்டும் என்பது பாரிசா பேகத்தின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ttn

இந்த பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருபவர் பாரிசா பேகம். கடமைக்கென்று குழந்தைகளுக்குச் சமைத்துப் போடும் சத்துணவு பணியாளர்கள் மத்தியில், பரிசா பேகம் மிகவும் சுவையாகச் சமைத்து மாணவர்களுக்குப் பரிமாறுவாராம். 

ttn

தன் கையால் சாப்பிடும் மாணவர்களுக்கு ஒரு நாளாவது தலைவாழையில் விருந்து அளிக்க வேண்டும் என்பது பாரிசா பேகத்தின் நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது. அதனால், அந்த கனவை நிறைவேற்றும் விதமாகப் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் நேற்று தனது சொந்த செலவில் பிரியாணி சமைத்து, மாணவர்களுக்குத் தலைவாழையில் விருந்தளித்துள்ளார்.  தினமும் சத்துணவு சாப்பாடு சாப்பிடும் அந்த குழந்தைகளுக்கு, தலைவாழை விருந்தளித்த  பாரிசா பேகத்திற்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!