Home சினிமா பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பிக் பாஸ் 3' : ரசிகர்களை குஷிப்படுத்தும் முக்கிய அப்டேட் இதோ!?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘பிக் பாஸ் 3’ : ரசிகர்களை குஷிப்படுத்தும் முக்கிய அப்டேட் இதோ!?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் ஹிட் அடித்த நிலையில் பிக் பாஸ் 3 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் ஹிட் அடித்த நிலையில் பிக் பாஸ் 3 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

kamal

பல மொழிகளில் பல நட்சத்திரங்களை வைத்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி  பிக் பாஸ் .  வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் போட்டியாளர்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதிமுறை.  தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 

kamal

2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். இதில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். முதல் பாகத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து  பிக் பாஸ் இரண்டாவது சீசன்  2018 ஆம் ஆண்டு  ஒளிபரப்பானது. இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இதில்  16 பேரும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டார். 

bigg boss 2

இந்நிலையில், பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.  நிகழ்ச்சியை வழக்கம்போல்  கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கமலை வைத்து போட்டோஷூட், புரொமோ  வீடியோக்கள் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். கமல் ஹாசன்  பிக் பாஸ் மேடையை தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கும் பயன்படுத்தி கொண்டார். இதை பல முறை அவரே மேடையில் கூறியிருக்கிறார். கமல் தொகுத்து வழங்குவதால் தான் இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது என்னும் ரசிகர்களின் கருத்தால் இந்த முறையும் கமலையே தேர்தெடுத்துள்ளது பிக் பாஸ் டீம்.  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது  குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews