பற்றி எரியும் டெல்லி… அமித்ஷா மீது குற்றம்சாட்டும் காங்கிரஸ்

டெல்லியில் இரண்டாவது நாளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது சென்று செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி போலீஸ் என்பது டெல்லி மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை, முழுக்க முழுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லியில் இரண்டாவது நாளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது சென்று செய்திகள் வெளியாகி உள்ளது. டெல்லி போலீஸ் என்பது டெல்லி மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை, முழுக்க முழுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

delhi-caa.jpg

இந்த நிலையில் டெல்லி சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மக்களையும் நாட்டையும் மதத்தின் பெயரால் பிரிக்கும் சக்திகளை வீழ்த்த டெல்லி மக்கள் அமைதிகாக்க வேண்டும். இந்த கலவரத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மரணம் வேதனை அளிக்கிறது.
மகாத்மா காந்தியின் தேசத்தில் வன்முறைக்கு இடமில்லை.வகுப்புவாத மற்றும் பிரிவினை சித்தாந்தத்திற்கு நாட்டில் இடமில்லை” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “டெல்லியில் நடைபெற்ற வன்முறை கவலைக்குரியது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. டெல்லி குடிமக்கள் எந்தவிதமான ஆத்திரமூட்டல்களைப் பொருட்படுத்தாமல் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதல் ஆகியவற்றைக் காட்ட நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

delhi-caa.jpg1.jpg

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், “டெல்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க டெல்லி போலீஸ் தவறிவிட்டது. டெல்லி முதல்வர் பொறுப்பை முற்றிலும் உதறித் தள்ளியுள்ளார். உள்துறை அமைச்சர் அமைதி காக்கிறார். டெல்லி கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

 

 

Most Popular

‘என் கணவனை காப்பற்றுங்கள்’.. சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் பால்துரையின் மனைவி தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்...

மும்பை செல்லவிருந்த ஏர்ஆசியா விமான விபத்து தவிர்ப்பு !

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 35 அடி கீழே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்த சம்பவம் நாடு...

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை! போலீஸ் ரெய்டில் சிக்கிய பெண்

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (32). இவர் கார் டிரைவராகவும் ஸ்விகி ஃபுட் டெலிவரி செய்யும் வேலையும்...

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வர அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு!

பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளரான துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் திமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக பிரபல...