Home தமிழகம் பரோலை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்த நளினி: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பரோலை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்த நளினி: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நளினியின் ஒருமாத பரோல் முடிவடையவுள்ள நிலையில் பரோலை நீட்டிக்க  தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

 சென்னை : நளினியின் ஒருமாத பரோல் முடிவடையவுள்ள நிலையில் பரோலை நீட்டிக்க  தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கடந்த 25ஆம் தேதி  வேலூர் மத்திய சிறையிலிருந்து,  பரோலில் வெளியே வந்தார். வேலூரில் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் மகள் திருமண ஏற்பாடுகள்  குறித்து ஆலோசித்து வருகிறார்.  அதே சமயம்  சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

nalini

சமீபத்தில்  கணவர் முருகனை சிறையில் சந்தித்து பேசிய நளினி மகள் திருமணம் குறித்து ஆலோசித்தாக  கூறப்படுகிறது. மேலும் நளினியின் மகள் ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளது. இதனால் தேர்வு முடிந்த பிறகு தான் அவர் தமிழகத்திற்கு வருகிறராம். இதனால் நளினிக்கு மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்கக் கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்தார்.ஆனால்  அவரது மனு ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த உத்தரவை ரத்து செய்து, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

hc

இந்நிலையில் இந்த மனுவானது  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி மனு குறித்து அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒத்திவைத்தனர். 

Most Popular

“ராத்திரியானா ரஷ்யாகாரி கூட ..”. – கள்ள உறவை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஒரு அழகு நிலையம் நடத்தும் ஒருவர், அங்கு வேலை செய்த ரஷ்யா நாட்டு பெண்ணோடு ரகசிய குடும்பம் நடத்தியதாலும் அதை தட்டிகேட்ட மனைவியை தாக்கியதாலும் கைது செய்யப்பட்டார்

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 2ஜி...

சேகர் ரெட்டி வீட்டில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு முடித்து வைப்பு!

சேகர் ரெட்டி வீட்டிலிருந்து ரூ. 34 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது . உரிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என சிபிஐ மனுத் தாக்கல்...

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு (வயது 73) கடந்த...
Do NOT follow this link or you will be banned from the site!