பரவும் டெங்குகாய்ச்சல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சலால் 4,192 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

நூற்றுக் கணக்கிலிருந்த காய்ச்சல் பாதிப்பு தற்போது ஆயிரக் கணக்காக உயர்ந்துள்ளது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. பல மாவட்டங்களில் மக்கள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட வண்ணம் உள்ளனர். டெங்குகாய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெண்டு காய்ச்சல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும்  4,192 பேர் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. நூற்றுக் கணக்கிலிருந்த காய்ச்சல் பாதிப்பு தற்போது ஆயிரக் கணக்காக உயர்ந்துள்ளது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Dengue

இது குறித்துப் பேசிய மருத்துவத் துறை அதிகாரிகள், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆயிரக் கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 பேருக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது என்றும் அரசு மருத்துவ மனைகளில் டெங்குகாய்ச்சலால் அனுமதிக்கப் படுவோருக்குச் சிகிச்சை அளிக்கத் தனி வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Dengue

 மேலும், பழனி அரசு மருத்துவமனையில் டெங்குகாய்ச்சலால் அனுமதிக்கப் பட்ட 3 நோயாளிகளில் ஒருவர் டெங்குகாய்ச்சலில் இருந்து பூரணமாகக் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் மற்ற இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...