Home அரசியல் பயிர் கடன் தள்ளுபடி பெறாதவர்கள் கமல்நாத், ராகுல் காந்தி மீது வழக்கு போடுங்க... விவசாயிகளிடம் பா.ஜ.க. வலியுறுத்தல்

பயிர் கடன் தள்ளுபடி பெறாதவர்கள் கமல்நாத், ராகுல் காந்தி மீது வழக்கு போடுங்க… விவசாயிகளிடம் பா.ஜ.க. வலியுறுத்தல்

மத்திய பிரதேசத்தில் பயிர் கடன் தள்ளுபடி பெறாதவர்கள் முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் ராகுல் காந்தி மீது வழக்கு போடுங்க என விவசாயிகளிடம் அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவையில் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் அடுத்த 13 மாதங்களில் உட்கட்சி மோதலால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. தற்போது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பயிர் கடன் தள்ளுபடி பெறாதவர்கள் கமல்நாத் மற்றும் ராகுல் காந்தி மீது குற்ற வழக்கு போடுங்க என பா.ஜ.க. அரசு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் விவசாயி பயிர் கடன் தள்ளுபடி திட்டம்

மத்திய பிரதேச விவசாய துறை அமைச்சர் கமல் படேல் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: கமல் நாத் முதல்வராக பதவியேற்ற இரண்டு மணி நேரத்துக்குள், ராகுல் காந்தி அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, 48 லட்சம் விவசாயிகளின் மொத்தம் ரூ.54 ஆயிரம் கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

மத்திய பிரதேச விவசாய துறை அமைச்சர் கமல் படேல்

ஆனால் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது நிலுவையில் உள்ள அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை. கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் பெற்ற விவசாயிகள் ஆனால் அவர்களின் கடன் தள்ளுபடி பெறாதவர்கள், கமல்நாத், ராகுல் காந்தி மற்றும் முந்தைய காங்கிரஸ் மீது மோசடி மற்றும் குற்ற சதி வழக்குகள் போடுங்க என வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் அந்த வழக்குகளில் உடனடியாக செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Most Popular

நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை

பஞ்சாப் காங்கிரசார் தனது உருவ பொம்மையை எரித்தற்கு, நான் சில அமைச்சரா அல்லது சிறந்த எதிர்க்கட்சி தலைவரா? என்று அவர்களுக்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதா கொண்டு வர வேண்டும்.. மத்திய அரசுக்கு நிஷிகாந்த் துபே வேண்டுகோள்

பொது சிவில் சட்டம், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான மசோதாக்களை கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே வேண்டுகோள் விடுத்தார்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் பணப் பரிமாற்றம்… மத்திய பிரதேச அரசு

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 தவணைகளாக மொத்தம் ரூ.4 ஆயிரம் நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.10.61 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!