பயணிகள் விமானத்தை வேண்டுமென்ற கடலில் மூழ்கடித்த துருக்கி அதிகாரிகள்!

துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே அந்நாட்டு அதிகாரிகள் கடலில் மூழ்கடித்துள்ளனர்.

துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே அந்நாட்டு அதிகாரிகள் கடலில் மூழ்கடித்துள்ளனர்.

துருக்கியின் வடமேற்குப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக பழைய விமானங்கள் மற்றும் பழுதுபோன விமானங்களை அழிக்கும் பணியில் விமானப்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏகன் என்ற கடற்பகுதியில் 30 மீட்டர் ஆழத்தில் 65 மீட்டர் நீளமுள்ள ஏர்பஸ் A330 ரக விமானத்தை மூழ்கடித்தனர். இவ்வாறு செய்ததன்மூலம் ஸ்கூபா டைவிங் எனப்படும் முக்குளிப்பாளர்கள் அங்கு அதிகமான எண்ணிக்கையில் வர வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறினர். எதிர்காலத்தில் முக்குளிப்பாளர்களின் கனவுக்கோட்டையாகக்கூட இந்த இடம் மாறலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்

இந்த ஏர்பஸ் A330 விமானம் 1995 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். கடந்த 24 வருடங்களாக விமானப்படையில் பணியாற்றிய இந்த விமானம் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது. இதையடுத்து  கடந்த மார்ச் மாதம் மத்திய தரைக்கடல் ரிசார்ட் நகரமான அன்டால்யாவிலிருந்து எடிர்னேவின் கேசன் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.

 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....