Home இந்தியா பன்னீருக்கு பதிலாக சிக்கன் : ஜொமோட்டோவுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம்!

பன்னீருக்கு பதிலாக சிக்கன் : ஜொமோட்டோவுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம்!

சிக்கன் மசாலாவை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சண்முக் புகார் அளித்துள்ளார்.

புனே: பன்னீர் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசாலாவை கொடுத்தனுப்பிய ஜொமோட்டோ நிறுவனத்திற்கு  ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து புனே நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

zomato

மும்பை புனேவை சேர்ந்தவர் வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக். இவர் ஜொமோட்டோ ஆப்பில்  பன்னீர் மசாலாவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு சிக்கன் மசாலாவை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சண்முக் புகார் அளித்துள்ளார். அதில், பன்னீர் மசாலாவும், சிக்கன் மசாலாவும் ஒரே மாதிரியாக இருந்ததால்  கண்டுபிடிக்க முடியவில்லை. சாப்பிட பிறகே தெரிந்தது. ஏற்கனவே ஒருமுறை இதே போன்றே அசைவ உணவை அனுப்பினர்’ என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜொமோட்டோ  நிறுவனம், இது எங்கள் தவறு இல்லை. உணவகம் தான் மாற்றி அனுப்பியுள்ளது என்று  விளக்கமளித்தனர். 

panner

இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றம் ஜொமோட்டோ நிறுவனத்திற்கு,  சேவை குறைபாட்டுக்காக ரூ.50 ஆயிரமும், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராத  தொகையை 45 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் கூறியுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார் ‘கமல் பட நாயகி’!

காங்கிரஸிலிருந்து விலகிய பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் இணைந்தார். பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா...

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி மலை கோவில் மின் இழுவை ரயில் இன்று முதல் இயக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, புகழ்வாய்ந்த கோவில்கள் அனைத்தும் பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டன. அந்த வகையில் பழனி...

நாளை காலை உருவாகிறது ‘புரெவி’ புயல் !

நாளை காலை புதிய புயல் உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காலை காற்றழுத்த...
Do NOT follow this link or you will be banned from the site!