Home தமிழகம் பத்திரிகையாளருக்கு அரிவாள் வெட்டு: காட்டுமிராண்டிகளை கைது செய்யுங்கள்; சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

பத்திரிகையாளருக்கு அரிவாள் வெட்டு: காட்டுமிராண்டிகளை கைது செய்யுங்கள்; சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

செய்தியாளர்  கார்த்தி மீதான இந்த கொடூர கொலைவெறி தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாகச் செய்தி வெளியிட்டதில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தியை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.  இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த தப்பிஓடிய  கார்த்தி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ராஜேந்திர பாலாஜி

 இந்நிலையில் இதுகுறித்து சென்னை  பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி நேற்று  (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு  சிவகாசியில் மர்ம நபர்களால் கொலைவெறி  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து போன  நிருபர் கார்த்தி சிவகாசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர்  கார்த்தி மீதான இந்த கொடூர கொலைவெறி தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ttn

குமுதம் ரிப்போட்டர்  இதழில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ வர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாகச் செய்தி வெளியான நிலையில் செய்தியாளர் மீது இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பத்திரிகையாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள்  ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.பத்திரிகையாளர்கள் சிந்தும் ரத்தம் தமிழகத்திற்கு கேடானது. செய்தி வெளியிட்டதற்காகப் பத்திரிகையாளர் கார்த்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையும் தமிழக அரசையும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் செயல்கள் அதிகரித்து வரும் அவல நிலையை கவனத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

பிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...

மீண்டும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல்!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக...

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை...

“காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் – விக்கிரமராஜா

திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு, வியாபாரிகளுக்கு சாதகமாக வராதபட்சத்தில், தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வணிகர் சங்க பேரமைப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!