Home வணிகம் பணவீக்கம் 5.13 சதவீதமாக அதிகரிப்பு

பணவீக்கம் 5.13 சதவீதமாக அதிகரிப்பு

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தை பணவீக்கம். பண வீக்கம் என்பதனை சுருக்கமாகச் சொன்னால், கடந்த ஒர் ஆண்டாக ரூ.100 என்ற பொருள், இன்று ரூ.120 என்ற நிலைக்கு உயர்ந்தால் பணவீக்கத்தின் அளவு 20 சதவீதம். அதாவது ரூ.100 நோட்டுக்கு அன்றும் அதே ரூ.100 மதிப்புதான். இன்றும் அதே ரூ.100 மதிப்புதான். ஆனால் பொருளின் விலை மட்டும் ரூ.20 அதிகரித்துவிட்டது. இதனை தான் பண வீக்கம் என்கிறார்கள். பொருள் மற்றும் ரூபாய் ஆகிய இரண்டின் மதிப்பும் சரியாக இருந்தால் பிரச்னை இல்லை, அதில் ஏற்றமோ இறக்கமோ என எது ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும்.

இந்திய பொருளாதாரத்தை சமீப காலமாக இப்பணவீக்கம் ஆட்டிப் படைப்பதகது வருகிறது. அதேபோல், நாளுக்கு நாள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் பணவீக்கத்தை வெளியிட்டு வரும் மத்திய அரசு, நடப்பு ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3.14 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் பணவீக்கம் 4.53 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...

கை கொடுத்த சிக்கன நடவடிக்கை…. ஏசியன் பெயிண்ட் லாபம் ரூ.852 கோடி….

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.851.90 கோடி ஈட்டியுள்ளது. அலங்கார வர்த்தக துறையை சேர்ந்த ஏசியன்...

ஐபிஎல்: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 43வது ஆட்டத்தில் , கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்,வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. பிளேஆஃப் செல்வதற்கு இந்த போட்டியின்...
Do NOT follow this link or you will be banned from the site!