பணம் திருடிய கடையையே மதுபானவிடுதியாக பயன்படுத்திய திருடர்கள்

கோவை மாவட்டம் எலச்சிப்பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையில் நள்ளிரவு புகுந்த திருடர்கள் பணத்தை திருடியது மட்டுமின்றி அங்கேயே அமர்ந்து மதுபானம் அருந்திவிட்டு சென்றுள்ளனர்.

கோவை மாவட்டம் எலச்சிப்பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையில் நள்ளிரவு புகுந்த திருடர்கள் பணத்தை திருடியது மட்டுமின்றி அங்கேயே அமர்ந்து மதுபானம் அருந்திவிட்டு சென்றுள்ளனர்.

லலிதா ஜூவல்லரி போன்ற நகைக்கடைகள் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒரு பக்கம், பணக்காரர்கள் வீட்டை நோட்டமிட்டு லட்சம் லட்சமாய் நகை, பணம் திருடும் கூட்டம் ஒருபக்கம். ஆனால் அஞ்சுக்கும் பத்துக்கும் அன்றாடம் அல்லாடும் சிறு சிறு கடைகளில் சென்று பணத்தை திருடி அவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் எதற்கும் லாயக்கற்ற திருடர் கூட்டம் மறுபக்கம். இந்த வகையில் ஒருசம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.

kovaitheft

கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையத்தில் மதுபான கடை அருகே பெட்டிக் கடை வைத்திருக்கிறார் நாகராஜ். நேற்றிரவு 10 மணிக்கு கடை பூட்டப்பட்டது. இன்று காலை கடையை திறக்க வந்து போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார் நாகராஜ். கடைக்குள் சென்று பார்த்த போது, பணம் 8 ஆயிரத்து 500 ரூபாய், கேஸ் சிலிண்டர், அடுப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றையும் திருடி சென்றது தெரியவந்தது. அதுமட்டுமின்றி திருடர்கள் பெட்டிக்கடையிலேயே மதுபானம் அருந்தி விட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக நாகராஜ் அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....