Home குற்றம் உள்ளூர் பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி?

பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி?

பணக்காரன் போல் வேடமிட்டு  பள்ளி மாணவியை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமரி: பணக்காரன் போல் வேடமிட்டு  பள்ளி மாணவியை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வீடு திரும்பாத மாணவி

school

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 19 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பாததால், பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவியை தேடிய போலீசார், அவரின் செல்போன் தரவுகளை ஆராய்ந்ததில் மாணவி கேரள மாநிலம் கோனி பகுதியில் இருப்பது தெரிய வந்தது. 

காதல் வலை

love

 

இதையடுத்து கேரளா விரைந்த போலீசார் மாணவியை  மீட்டதோடு, அவரை அழைத்து சென்ற ஜோஸ்பிளின் ராஜகுமார் என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஓராண்டாக மாணவி படிக்கும் பள்ளி முன்பு சென்று அவருக்கு காதல் வலை வீசியதோடு, தன்னை ஒரு பணக்காரன் போலவும் காண்பித்துக் கொண்டுள்ளார். 

பணக்கார வாழ்க்கை? 

marrige

 

தனக்கு கேரளாவில் சொந்த வீடு இருப்பதாகவும் திருமணம் செய்துகொண்டு அங்கு சென்று சொகுசாக வாழலாம் என்றும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளான் ஜோஸ்பிளின் ராஜகுமார். இதை நம்பி வீட்டிலிருந்த நகைகளுடன் வெளியேறிய மாணவி ராஜகுமாருடன் சென்றுள்ளார். இதை தொடர்ந்து மாணவியை திருமணம் செய்து கொண்ட அவர்,  கோனி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். 

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

arrest

 

மேலும் மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததோடு, நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்துள்ளார். இதையடுத்து  சில நாட்களிலேயே அவன் பணக்காரன் அல்ல, கட்டிடத் தொழிலாளி என்பது மாணவிக்கு தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து, ஜோஸ்பிளின் ராஜகுமாரை  போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: பழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்!

மாவட்ட செய்திகள்

Most Popular

‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; ஸ்டாலின் தான் அதுக்கு சேர்மேன்’ – முதல்வர் கடும் விமர்சனம்!

திமுகவில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் ஆட்சி பொறுப்பிற்கு வர முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில்...

குடியரசு தலைவர் திறந்தது நேதாஜி படமா? நேதாஜி ரோலில் நடித்தவரின் படமா?

குடியரசு தலைவர் திறந்துவைத்தது நேதாஜியின் படமா அல்லது கும்னாமி என்ற திரைப்படத்தில் நேதாஜியாக நடித்தவரின் படமா என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்...

இரட்டை வேடம் போடுவது திமுக தான் : அமைச்சர் விமர்சனம்!

சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு...

கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கூலி தொழிலாளி பலி

நீலகிரி நீலகிரி அருகே சுற்றுலா வந்த கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!