Home உணவு பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் -தஞ்சாவூர்… ஒரு முறை போய்ப்பாருங்க வேற லெவல்!

பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் -தஞ்சாவூர்… ஒரு முறை போய்ப்பாருங்க வேற லெவல்!

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் நிறைய கிளைகள் உள்ள உணவகம் இதுதான்.சென்னையில் மட்டும் பத்து பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்கள் இருக்கின்றன.இருப்பதிலேயே சிறப்பான கிளை , தஞ்சைப் புதிய பேருந்து நிலையம் அருகில் இருப்பதுதான்.சென்னையில் உள்ள சில கிளைகளில் தஞ்சாவூர் சுவை இல்லை என்பதையும் மறுக்க முடியாது.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் குழந்தைத்தனமானது!

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் நிறைய கிளைகள் உள்ள உணவகம் இதுதான்.சென்னையில் மட்டும் பத்து பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்கள் இருக்கின்றன.இருப்பதிலேயே சிறப்பான கிளை , தஞ்சைப் புதிய பேருந்து நிலையம் அருகில் இருப்பதுதான்.சென்னையில் உள்ள சில கிளைகளில் தஞ்சாவூர் சுவை இல்லை என்பதையும் மறுக்க முடியாது.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் குழந்தைத்தனமானது!

food

ஆனால் ,தஞ்சை கிளை,அடிச்சுக்கவே முடியாது.அளவு சாப்பாடு சாப்பிடற ஆட்களா இருந்தாலும் அவர்கள் கொடுக்கிற டேஸ்ட்டான உணவை சுவைத்தால் கண்டிப்பாக அன்றைக்கு அன் லிமிட்டெட் சாப்பாடு இறங்குவது நிச்சயம். இவர்களின் சிறப்பு எட்டு வகையான கிரேவிகள் தருவதுதான்.

food

ஒரு பெரிய வாழை இலையைப் போட்டு விட்டு,இரண்டு பொரியலுடன், அன்றைய காம்பிளிமெண்டாக,கோலா உருண்டையோ,பொரித்த காலா மீனோ தருகிறார்கள். ஓரமாக இரண்டு சின்ன வெங்காயங்களை உரித்து வைத்து விட்டு ‘ ஜீரணத்துக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டு சோறு வைக்கிறார்கள். நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களா என்பதை கண்காணிக்க ஒரு பெண்வந்து நிற்கிறார்.அங்கு உள்ள சூப்பர்வைசர்கள் யாரும் ஹோட்டலுக்கான யூனி ஃபாம் அணிந்திருப்பதில்லை! ‘பளிச்’கல்யாண வீட்டு விருந்துக்கு வந்தவர்கள் மாதிரிதான் இருக்கிறார்கள்.

food

அப்புறம் வரிசையாக கிரேவிகள் அணிவகுத்து வருகின்றன. முதலில் காரசாரமான சிக்கன் கிரேவி,அதன்பின்னால் காரமில்லாத,தேங்காய் அரைத்து விட்ட மட்டன் எலும்புக் குழம்பு,கவிச்சியே இல்லாத நல்லெண்ணெயில் செய்த கருவாட்டு தொக்கு,இறால் தொக்கு,நண்டு குழம்பு ஒரு நண்டோடு என்று வரிசையாக வருகிற ஒவ்வொரு கிரெவியோடும் இரண்டு கைப்பிடி சோறு தின்றாலே அவர்கள் சின்ன வெங்கயம் தரும் காரணம் புரிந்துவிடும்.

food

இவை தவிர ,அன்று உங்கள் அதிஷ்ட தினமாக இருந்தால் வெள்ளைப் பொடிமீன் குழம்பு கிடைக்கும்.ஆறு கடலுடன் சேருமிடத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மீனின் சுவை அபாரமானது.இவைதவிர வழக்கமான, ஆடு,கோழி,மீன் கறிவகைகளும் உண்டு.

food

கடைசியாக சுரீர் சுவையுடன் மிளகு சீரக ரசம் வருகிறது.நீங்கள் மறுத்தால் கூட உங்கள் டேபிளைக் சூப்ரவைஸ் செய்யும் பெண் விடமாட்டார்.அது முடிந்த பிறகு சின்ன மண் செப்பில் கெட்டித் தயிர் வந்து உங்களை வெறுப்பேற்றும்.நீங்கள் பரிதாபமாகப் பார்த்தால்,அந்த கண்காணிப்பாளர் சிரித்தபடி ‘ஊறுகாய் தரேன் சார்’ என்று கடாரங்காய் ஊறுகாய் வைக்கிறார்.
ஒருமுறை பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்ஸில் சாப்பிட்டுப் பாருங்கள். மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

எச்சரிக்கை: போலிகளை கண்டு ஏமாறாதீர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற போவது இவர் தான்: சோகத்தில் பாலா & கோ

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 56 நாளான இன்று...

“என்ன பண்ணாலும் பெண்ணாவே பொறக்குதே “கோபத்தில் ஒரு கணவர் என்ன பண்ணார் பாருங்க..

தன்னுடைய மனைவி தொடர்ந்து பெண் குழந்தையாக பெற்றதால் ஒரு கணவன் அவரை விவகாரத்து செய்ததால் அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை கவலைக்கிடம் : சோகத்தில் சக நடிகர்கள்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகையின் உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் மக்களின் கவனம்...

“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

தமிழகத்தில் வரும் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி...
Do NOT follow this link or you will be banned from the site!