Home சினிமா 'படுக்கைக்கு வந்தால் தான் வாய்ப்பு என்றார்கள்'...அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன்: பிரபல நடிகை பரபரப்பு புகார்!

‘படுக்கைக்கு வந்தால் தான் வாய்ப்பு என்றார்கள்’…அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன்: பிரபல நடிகை பரபரப்பு புகார்!

நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி ஆகியோர் சம்மந்தப்பட்டவர்களின்  பெயர்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினர்

படவாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் திரைத்துறையில் இருப்பதாக நடிகைகள் பலர் புகார் கூறினார். குறிப்பாக நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி ஆகியோர் சம்மந்தப்பட்டவர்களின்  பெயர்களை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினர்.  அந்த வரிசையில் இணைந்துள்ளார் நடிகை மஞ்சரி பட்நிஸ். 

ttn

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த ’சக்தி’ என்ற படத்தில் நடிகை  மஞ்சரி பட்நிஸ். இவர்  தமிழில் முத்திரை, பாலிவுட்டில் பரோட் ஹவுஸ், ஜீனா இசிகா நாம் ஹேய் உள்ளிட்ட படங்களில் நடித்து  பிரபலமானவர். இருப்பினும் சக்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  மஞ்சரி பட்நிஸ் எந்த படத்திலும் நடிக்கவில்லை. படவாய்ப்புகள் குவிந்து  மஞ்சரி பட்நிஸ் ஏன்  நடிக்கவில்லை என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

ttn

இந்நிலையில் இதுகுறித்து  பேட்டி ஒன்றில் மஞ்சரி பட்நிஸ் மனம் திறந்துள்ளார். அதில், நான் கடைசியாக நடித்த சக்தி திரைப்படம் வெற்றி பெற்றது. எனக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனாலும் நான் நடிக்கவில்லை.  அதற்கு காரணம்   படத்தின் வாய்ப்பு கொடுக்க வந்த இயக்குநர்கள்  ஒரு கண்டிஷன் போட்டனர். அதாவது  தங்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். ஆசைக்கு இணங்கினால் தான் வாய்ப்பு என்றனர். எனக்கு என் திறமை மீது நம்பிக்கை உள்ளது அவர்கள் சொன்னது போல செய்து தான் நான்  படத்தில் நடிக்கவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டேன்’ என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.   மஞ்சரி பட்நிஸின் இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

Most Popular

”சர்ஃபேஸ் ஸ்விப்ட் என்ற சிறிய லேப்டாப்” –அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் !!

கணிணி உலகின் ஜாம்பவானாக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சர்ஃபேஸ் ஸ்விப்ட்' என்ற புதிய சிறிய லேப்டாப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு சந்தை! கொரோனாவிலிருந்து காக்க சிசிடிவி கேமராக்கள் வளையத்தில் சந்தை..

கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை திறக்கப்பட்டது. சென்னையில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை...

’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை

ஈரோடு மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை வந்தார். சிவகிரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்...

பருவமழை தொடங்குவதால் ஈரோடு மாநகரில் தூர்வாரும் பணிகள் தீவிரம்

பருவமழை தொடங்குவதையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் கூட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!